Friday 28 September 2012

தாண்டவம்-விமர்சனம்

        ஹீரோ ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி இந்தியாவில் உள்ள டாப் 5 ஆபிஸர் ல அவரும் ஒருத்தர்.தீவிரவாதிகள்,உளவாளிகளை பிடிக்கும் ப்ராஜெக்ட் அவருக்கு கொடுக்கபடுகிரது.அதற்க்குள் வீட்டில் இருந்து அவருக்கு அழைப்பு வருகிறது,இன்னும் 2 நாளில் கல்யாணம்னு சொல்றாங்க...ஹீரோக்கு கல்யாணம் பண்ணிக்க பிடிக்கல அதனால் டும் டும் டும் மாதவன் மாதிரி கல்யாணத்த நிறுத்த திட்டம் போடுறார் அதுவும் ஹீரோயின பாக்குர வரை மட்டும் தான்.

   கல்யாணம் ஆகிடுது.ஹீரோ என்ன நினைச்சாரோ அதயே ஹீரோயினும் சொல்ராங்க...2 பேருக்கும் பழக்கமே இல்ல ஸோ இதெல்லாம் இப்ப வேணாம் நல்லா புரிஞ்சிக்கிட்டு அப்றம் வச்சிகலாம் நு முடிவு பன்றாங்க..

    மவுன ராகம் கணக்கா தொட்டும் தொடாமல் வாழ்கின்றனர்.பட்டா போட்டும் வீடு கட்டாம இருப்பது போல வாழ்ராங்க.. இதன் இடையில் ஹீரோ தன் புராஜெக்ட் காரணமா லண்டன் போராறு கூடவே மனைவியயும் கூட்டிடு போறாரு..அங்கே வில்லணுக்கும் தனக்கும் நடக்கும் மோதலில் ஹீரோயின் அவுட்,ஹீரோ 2 கண்ணும் புஸ் ஆகிடுது.

      அந்த 5 வில்லன்களையும் எக்கோலொகேஷன் யுக்க்தியை பயன் படுத்தி அந்த கண் பார்வையற்றவர் பழிவாங்கும் வழக்கமான கதையை பிரம்மாண்டமான கிரைண்டரில் போட்டு அரைத்து இருக்கிறார் விஜய்.

      முதல் பாதியில் கொலைகளை செய்யும் குருடராகவும்,இரண்டாம் பாதியில் ஐ.பி.எஸ் அதிக்காரிக்கான மிடுக்குடனும் அருமையான நடிப்பை பதிவு செய்கிரார் சீயான்.விக்ரம்.

      அனுஷ்கா ஆரடி ஆப்பிள் போல வருகிறார்.கல்யாண்கோலத்தில் தேவதையாக கண்களுக்கு காட்சி தருகிறார் என்றால் அது மிகை அல்ல.
 கிராமத்து குசும்புடன் இவர் வரும் காட்சிகளில் கைதட்டல் தியேட்டரயே சும்மா அல்லுது..பெட்ரூம்ல விக்ரமை கண்ணால் சைகை காட்டி கூப்பிடும் காட்சியில் என் அருகில் இருந்த ஒருவர் எழுந்தே விட்டார்..அவ்வளவு நேர்தியான நடிப்பு.இவ்ளோ அழகான ஃபிகருக்காக தமிழன் எப்படி ஏங்கி போய் கிடக்குரானு அப்ப தான் தெரிஞ்சது.


  
      எமி ஜாக்ஸன் சிலீவ்லெஸும் டைட் ஜீனுடன் முதற்பாதியில் விக்ரமுடன் சுற்றுகிரார்.லக்ஷ்மிராய் நடிப்பதற்க்கு வாய்ப்பில்லை.சந்தானம் காமெடி போர்சன் குறைவு என்றாலும் அவர் வரும் போதெல்லாம் தன் பங்கிற்க்கு சிக்ஸரும் ஃபோருமாக அடித்து நொருக்குகிறார்.

    நாசர் கொலை வழக்கை விசாரிக்கும் போலிஸ் ஆபிசர் வேடத்திற்க்கு கன் கச்சிதமாக பொருந்துகிறார்.மேலும் சில பல நடிகர் பட்டாளத்துடன் விக்ரம் விஜயின் உதவிடன் ஆடியிறுக்கும் தாண்டவம் தான் இந்த திரைப்படம்.
                      
பிளஸ்:
விக்ரம் நடிப்பும் பாடிலாங்குவேஜும் பிராமாதம்,
அனுஷ்கா,சந்தானம் வரும் காமெடி(விசாரனை செய்யும் இடம்)
நீரவ் ஷா(ஒளிப்பதிவு அருமையப்பா..)
ஜீ.வீ.பிரகாஷ் பாடல்களிலும்,பிண்ணனி இசையிலும் வெளுத்து கட்டிடார்(ஐ லவ் யு ஜீ.வீ)

மைனஸ்:
கஜினி+போர்களம் படத்தை கலந்து கொடுத்திருப்பது,
ரொம்ப நீளமா போரமாதிரி ஒரு ஃபீலிங்கு
அடுத்து என்ன நடக்க போகுதுனு ஈசியா யூகிக்கிற திரைக்கதை


எதிர்பார்க்கபடும் ரேட்டிங்ஸ்

ஆனந்தவிகடன்      -  43
குமுதம்                       -   ஓ.கே
பிஹிண்ட்வுட்ஸ்    -     2.75


ஆஹா ஓஹோ என சொல்லும்படியான படமும் இல்லை அதே நேரத்தில் மொக்க படமும் இல்ல...டைம் பாசுக்கு ஒரு நல்ல படம்.குடும்பத்துடன் பார்க்கலாம்.


No comments:

Post a Comment