Tuesday 15 January 2013

சமர்-விமர்சனம்

   ஹீரோவுக்கு தன் காதலை மெயிண்டைன் பண்ன தெரில அதுனால முதல் சீன்லயே விசாலுக்கும் ,சுனைனாவிற்க்குமான காதல் பிரேக் அப் பண்ணிட்டு சுனைனா பாங்காக் போயிடுரா.அந்த சோகத்திலேயே விசால் மூழ்கிகிடக்கும்போது 3 மாதத்தில் ஒரு கொரியர் வருது.
   
     அதுல பாங்காக் ல இருந்து சுனைனா அங்க வருனும்னு எழுது ஒரு டிக்கெடும் அனுப்புறாங்க.ஹீரோ பாங்காக் பயணிக்கும் போது திரிசாவை பார்க்கிறார்,பழகுறார்.

    சுனைனா வர சொல்ற இடத்துக்கு போறார்,அங்க எதிர்பாறா விதமாஏக பட்ட சம்பவம் நடக்குது,மிக பெரிய பிரச்சனையில விசால் மாட்டிகிறார்.ஒரு குரூப் வருது அதுல நீங்க மிக பெரிய மில்ல்லினியர்னு சொல்ராங்க,கொலை முயற்சி பண்றாங்க.,
 
   இப்படி பல்வேறு திருப்பத்தோட போற படத்துல என்ன நடக்குது,அந்த சூழ்ச்சிக்கு காரணம் யாருனு கண்டுபுடிக்கிறார் விசால்.கடைசில திரிசாவோட சேந்தாரா,அந்த சூழ்ச்சிக்கு என்ன,ஏன் அவர சுத்தி நடக்குது,அவங்களை அவர் என்ன பண்றாருனு வெள்ளிதிரையில் பார்க்க.

  இடைவேளைக்கு அப்றமா படத்துல சூடு புடிக்குது.ஒவ்வொரு காட்சியும் முக்கியதுவம் வாய்ந்தது.வில்லன் கம் சைக்கோவா வர இரண்டுபேரும் நல்ல தேர்வு.

  இது போன்றகதை அம்சம் உள்ள படங்களை வரவேற்கனும்,இதே போன்ற கதை உள்ள படம் தான் டேபிள் நம் 21 என்ற ஹிந்தி படம்.

படத்துக்கு மிக பெரிய பலம் யுவன் பாடல்களும்,தரணின் பின்னனி இசை,ரிச்சர்ட் நாதன் கேமரா,திரைக்கதை.,விசால்,திரிசா.

   எடிட்டிங் இன்னும் கொஞ்சம் நல்ல இருந்த தேவையற்ற குலப்பத்த தவிர்த்து இருக்கலாம்.ஒரு உண்மைய சொல்லனும்னா படம் பார்க்க போனவர்களில் ஏதோ எனக்கு மட்டும் தான் இந்த படம் பிடிச்சிருக்கு,மற்றவர்களுக்கு பிடிக்கலனு சொல்லிடாங்க.


 எதிர்பார்க்க படும் மதிப்பெண்:
ஆனந்தவிகடன் - 44
குமுதம்-ஓக்கே
மை ரேட்டிங் - 7.5/10

2 comments:

  1. Apa,padam pakalam polayeee...!!!

    ReplyDelete
  2. கண்டிப்பா போகலாம்...வித்தியாசத்தை விரும்புவோர்களுக்கு பிடிக்கும்..

    ReplyDelete