Monday 10 September 2012

சிறுகதைகள்


                                                    முடிச்சிகள்(knots)

 இது என் முதல் பதிவு படித்துவிட்டு பிடித்தால் லைக்கவும்.....

        குமார்(வயது 27,தாய் தந்தை அற்ற அனாதை) விரைவிலேயே பணக்காரனாக வேண்டும் என்ற என்னம் கொண்டவன்.அதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழி வங்கியில் கொள்ளை அடிப்பது.முதலில் அவனை பற்றி பார்போம்,அனாதை ஆசிரமத்தில் படித்து வளர்ந்தவன்.பெரம்பலூரில் உள்ள இந்தியன் பாங்க் அருகில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தான்.அப்போது அந்த வங்கியில் உள்ள செக்கூரிடியின் தொடர்பு கிடைத்தது.மேலும் கடைக்கு வருபவர்களிடமும் நல்ல பழக்கம் கிடைத்தது.எனினும் அவன் நடத்தை சரியில்லாத காரணத்தால் அவனை அந்த கடை முதலாளி வேலையை விட்டு தூக்கி 2 மாத காலம் ஆகிறது.

      அந்த இந்தியன் பாங்க் கில் தற்போது உள்ள மானேஜர் மாற்றபட்டு புதிதாய் ஒருவரை நியமித்து உள்ளது.அவர் பெயர் முத்துசுந்தரம் சுருக்கமாக MS என்றே செல்லமாக அழைத்தனர்.புத்தி கூர்மை உள்ள ஒரு மனிதர்.

      அந்த வங்கியில் கொள்ளை அடிப்பதற்காக குமார் திட்டமிட்டான்,அதன் படியே ஒரு பெண்ணை செட்டப் செய்து(தப்பான செட்டப் இல்ல நடிக்க) வரவழைத்து திட்டத்தை கூறுகிரான்.மேலே சொன்ன அந்த செக்கூரிடியிடம் தன் திட்டத்தை கூறி அவனை சம்மதிக்க வைக்கிறான்.குமார் செக்கூரிட்டியிடம்”மச்சி இந்த கொள்ளை திட்டம் சிறப்பாக முடிய நீ ஒன்னு செய்யனும்,லாக்கர் சாவி யாரிடம் இருக்குனு சொல்லு சரியா முடிஞ்சா அதுல 35% உனக்கு தரேன்”னு சொல்லி அவனை சம்மதிக்க வைக்கிரான்.

      திட்டபடி அமாவாசை தினத்தன்று,ஒரு மாருதி ஆம்னி வாடகைக்கு எடுது அந்த பெண்ணிடம் சொல்கிரான்”மயக்கம் போட்ட மாதிரி சரியா நடிமா உன்ன வச்சி தான் இத நடத்தவே போரேன்”அவளும் “நடிப்புல நான புலியாக்கும்”னு சொல்லி கிளம்பினாள்.

      திட்டம் நிறைவேர நேரம் கூடியது,நள்ளிரவு 10 மணியளவில் MS வீட்டின் அருகே வண்டியை சத்தமில்லாமல் நிறுத்தினான்.”அப்டியே மயங்கின மாதிரியே இரும்மா நான் உன்ன அப்டியே தோள்ல சாய்த்து தூக்கிட்டு போரேன்”னு சொல்ரான் அவளூம் ஆப்படியே உயிர கொடுத்து நடிக்கிரா.

    உண்மையிலே அவ நடிப்புல புலி தான் அப்டியே மயங்கிய நிலையிலேயே இருப்பதுபொலவே நடித்தாள்.”சார்,சார்,சார்” என்று மெதுவாக கூப்பிட்ட படியே கதவை தட்டினான்.சிறிதுநேரத்திர்கெல்லாம் MS வந்து கதவை திறந்து”ஹெலோ யாரு நீங்க உங்களுக்கு என்ன ஆச்சி”னு கேட்டார்.”இல்ல சார் நான் வண்டில வந்துகீடு இருந்தேன் அப்ப யாருனு தெரில இந்த பொண்ணூ தெருவுல மயங்கி கிடந்தா அதான் பக்கத்துல இந்த வீடு இருந்தது,அதுக்கு தான் first aid பண்ணி இந்த பொண்ணை அவ வீட்டுக்கு அனுப்பிடலாம்னு பாத்தேன் சார்.

     சரி இருங்க இந்த டவல கழட்டி வச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வந்துடுரேன்.அந்த பொண்ண இங்க சோஃபா ல போட்டு நீங்க இங்க உக்காருங்க.அப்டியே பக்கத்துல directory இருக்கு அதுல எங்க டாக்டர் நம்பெர்க்கு ஃபோன் பன்னி சொல்லிடுங்கனு சொல்லிட்டு MS உள்ளே சென்றான்.

    அவன் உள்ளே சென்ற சின்ன கேப்புல குமார் டீவி யின் அருகே இருந்த அந்த சாவி கொத்தை எடுத்து தான் கொண்டு வந்த சாவியை அங்கு வைத்து தன் திட்டத்தில் பாதி கிணரு தாண்டினான்.MS வெளியே வந்தான்,வந்ததும் டாக்டருக்கு ஃபோன் செஞ்சிங்கலா நு கேட்டார்.குமார் பதட்டதுடன்,பண்ணிடேன் சார் இன்னும் 10 நிமிசத்துல வந்துடுரேன்னு சொன்னாருனு சொன்னான்.

    மயக்கத்தில இருந்து எழுந்தது போல பாசங்கு காட்டி எழுந்தால்.எல்லா படத்துலயும் காட்ரதுபோல”நான் எங்க இருக்கேன்,நீங்கலாம் யாரு நு கேட்டாள்”.நீ இப்ப என் வீட்டுல தான் இருக்கமா,மயங்கி நீ தெருவுல விழுந்து கிடந்த இந்த புண்ணியவான் தான் உன்னை இங்க போட்டு பாத்துகிட்டாருனு சொன்னா, உடனே அவ”அய்யோ நான் வேப்பந்த்தட்டை சார் இங்க என் ஃபிரண்ட் அ பாக்க வந்தேன் நடந்து வரும்போது அப்டியே மயங்கிடேன்,சாரி சார் இப்பவே ஒவெர் டைம் ஆச்சி கடைசி பஸ் போயிடும்,நான் கிளம்புரேன் சார்,ரொம்பா தேங்க்ஸ் சார்”னு சொல்வதற்க்குள்,சரி சார் அப்டியே நானும் கெளம்புரேன் அந்த பொண்ண பஸ்டாப் ல விட்டுடு நானும் பொரேன்னு சொல்லி குமாரும் ஜகா வாங்கினான்.அவர்களை ஒருமுறை பார்த்து சரி போட்டு வாங்க என கூறி விடுமுறை வழங்கினான்.

      சூப்பரா நடிச்சமா நீயெல்லாம் நல்ல வருவனு கூறி 10 ஆயிரம் வழங்கி வீட்டுக்கு அவளை அனுப்பினான். அனுப்பிவிட்டு நேரே பாங்கிற்கு சென்றான்.அவனும் அந்த காவலாளியும் கதவை திறந்தனர்.

      பின்னாடி இருந்து ஒரு சத்தம்”ஹாண்ட்ஸ் அப்” அந்த சரக போலிஸின் குரலது.அவ்லோ தான் எல்லாம் முடிந்தது,அவனையும் அந்த காவலாளியையும் கையும் களவுமாக பிடித்தனர் போலிஸ். சார் நாங்க இன்னைக்கு திருட போரோம்னு உங்களுக்கு எப்படி இந்த விசயம் தெரிஞ்சதுனு சொல்லுங்க சார்,என்றான். உடனே வா காலைல எல்லாம் அவரே சொல்லுவாருனு சொல்லி காவல் நிலையம் அழைத்து சென்றது போலிஸ்.

    சூரியன் உதித்தது ஆனால் அவனை யார் காட்டி கொடுத்திருப்பர் என் அது மட்டும் அவனுக்கு உதிக்கவில்லை.பின்னாடி போலிஸ் யாரிடமோ பேசுவது போல அவனுக்கு கேட்டது.அதை கூர்ந்து கவனித்தான்.Mr.MS சரியான நேரத்தில தகவல் கொடுத்ததால அவங்கள பிடிசிடோம்.ஆமா உங்களுக்கு எப்படி அவங்க இன்னைக்கு திருடபோராங்கனு கண்டுபிடிச்சி சொன்னிங்க,ஓ ஓ அதுவா சார் அவங்க பாங்க் ல திருட போராங்கனு தெரிஞ்சிக்க ஒரு காரணம் இல்ல மொத்தம் 3 காரணம் இருந்தது,சொல்ரேன் கேட்டுகோங்க,

       நான் குடி இருக்கும் அந்த வீதியில இப்ப தான் செம்மண் ஆல் ஆன வீதி போட்டாங்க.அந்த பொண்ணு மயங்கி கீழ விழுந்து கிடந்ததா அவன் சொன்னான். ஆனா அந்த பொண்ணு கீழ விலுந்துஇருந்தா அதோட white dress ல எந்த கரையும் தெரியல,இதனால எனக்கு கொஞ்சம் டௌவ்ட் வந்தது.அத கிளியர் பண்ண தான் எங்க ஃபாமிலி டாக்டருக்கு ஃபோன் பன்ன சொன்னேன்.அவரு மதுரைக்கு போய் 2 நாள் ஆகுது அவரு இன்னைக்கு(அதாவது நாளைக்கு) தான் வருரேனு சொன்னாரு,ஆன இந்த ஆளூ இன்னும் 10 நிமிசத்துல வந்துடுவாருனு சொன்னதா சொன்னான். அதனால கொஞ்சம் கண்ஃபார்ம் பன்னவே சாவிகொத்த எடுத்து டீவி பக்கத்துல வச்சேன்.ஆனா அதுக்கு பதிலா வேர இருக்கவும் உடனே உங்களுக்கு ஃபோன் பன்னேன்.அப்றம் தான் நடந்தது உங்களுக்கே தெரியுமேனு சொல்லி MS முடித்தார்.

      குமார் மனதுக்குள் இதனால தாண்ட இவன இந்த பாங்க் ல மானேஜரா போட்டுருக்காங்க உன்கிட்ட தோத்ததுல நான் பெரும படுரேன். அய்யோ அவளால தான் நாம மாட்டினோன் கடைசில 10 ஆயிரம் ரூபாயும் வேர இழந்துடோம்.அடுத்த முறை இந்த தப்பெல்லாம் இல்லாம சரியா திருடனும் கண்டிப்பா அவள கூப்பிட கூடது என கூறிகொண்டோ சுவரை முட்டினான்.

3 comments: