Friday 12 October 2012

மாற்றான் விமர்சனம்

மாற்றான் : விமர்சனம்...

   கே வி ஆனந்த் + சூர்யா கூட்டணியில் இரண்டாவது படம்.. 'கோ' இமாலய வெற்றிக்கு பிறகு கே வி ஆனந்த் இயக்கும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் நண்பர்களுடன் சென்றேன்.
இவ்வளவு எதிர் பார்ப்பை ஏற்படுத்திய படம் first day second show ஹவுஸ் புல் ஆகவில்லை.. என்ன கொடுமை! 

    சரி படத்த பாப்போம்...அகிலன் தம்மு தண்ணி என ஜாலி யாக இருக்கும் கதாபாத்திரம்.. விமலன் கம்யுனிசம், ஒழுக்கம் என இருக்கும் நல்ல பையன். அகிலன் அஜித் பேன்...விமலன் விஜய் பேன். 

   ஹீரோக்களோட அப்பா பேபி மில்க் ப்ராடக்ட் கம்பெனி ஓனர் எல்லா கம்பெனியையும் அடிச்சு முன்னேரினாருனு எல்லாஅருக்கும் ஒரே குழப்பம்,அப்போ ஒரு ஃபாரின் லேடி பத்திரிக்கையாளர்னு சொல்லி அந்த கம்பெனிய வேவு பாக்க வராங்க, அவ எல்லா ரகசியத்தையும் தெரிஞ்சிகிறா.அதுல ஒரு திருப்பம் என்னனா அவங்க ஒரு ஃபாரின் உலவாளி.அவங்க அப்பா அமெரிக்காவுக்கு ஊக்கமருந்து தயார் செய்து கொடுக்கிரார்.

   இந்த மருந்த ஒரு மாட்டுக்கு கொடுத்தா அது தன் வாழ்நாளில் கொடுக்க்கும் பாலை 2 மாதத்தில் தந்துவிடும்,இதை தன் பால் பவுடரில் கலக்கிறார்.இதனை கண்டரியும் ஹீரோ அழிக்க புரப்படுகிறார்.

   இதுக்குமேல கதை சொன்னா சுவாரஸ்யம் கொரஞ்சி போயிடும்.
முதல் பாதியில் சூர்யா அட்டகாசம்.. அகிலன் விமலன் என்ற இரு கதாபாத்திரத்தை அருமையாக வேறுபடுத்தி காட்டி இருக்கிறார். படமும் அப்படியே கே.வி.ஆனந்த் + சுபாவிற்கே உரிய டிவிஸ்ட் அன்ட் டர்ன்ஸ் அடித்து பரபரவென செல்கிறது.. அதிலும் MGM நடக்கும் சண்டை காட்சி செம செம... காஜல் அகர்வால் வருகிறார் பாட்டு பாடுகிறார்.. முத்தம் கொடுக்கிறார்...நாணி கோணி பாடல் ரொம்பவும் அழகாக படம் பிடித்து இடுகிறார் கே.வி.ஆனந்த். எதிர் பார்த்த மாதிரியே முதல் பாதியில் நல்ல பையன் விமலன் செத்து போறாரு...

முதல் பாதி பாதி முடிந்தவுடன் அரங்கம் முழுவதும் கை தட்டல்.. அப்பா நம்ம செலவு பண்ணுன 100 ரூபாய் வீண் ஆகவில்லை என எல்லோரும் சந்தோசமாக இருந்தோம்.. உடனே கார்த்தி நடித்த "அலெக்ஸ் பாண்டியன்" ட்ரைலர் போட்டு நம்மை சில நிமிடம் சித்தரவதை செய்தார்கள்.

  முதல் பாதியே இப்படி என்றல் இரண்டாம் பாதி எப்படி இருக்கும் என எதிர்பார்ப்புடன் படம் பார்க்க தயாரானோம்.. அப்ப தான் விதியின் விளையாட்டு ஆரம்பமானது,டேய் என்ன விட்ருங்கடா என்று சொல்லும் அளவுக்கு ரொம்ம்ம்ப இழுத்துடாங்க. 

  ஆரமபித்த உடனே அதிரடி ட்விஸ்ட்... உடனே அடுத்த ட்விஸ்ட்... படம் உக்ரைன் நோக்கி பயணிக்கிறது... உடனே அடுத்த ட்விஸ்ட் அதில் ஒரு கிளை கதை...மறுபடியும் ஒரு ட்விஸ்ட்.. போதும் இதோட நான் நிறுத்தி கொள்கிறேன்..

    படத்தின் உண்மையான ஹீரோ எழுத்தாளர்கள் சுபா தான்.கதை,வசனம் செம ஷார்ப்.முதல் பாதியில் சூர்யா வழக்கம் போல செம ஆக்டிங்.இரட்டையர்களை வேருபடுத்தி காட்டுகிறார்.இரண்டாம் பாதியில் தான் இவருக்கு வேலை.மனுசன் சண்டை காட்சியில் பின்னி பெடல் எடுக்கிரார்.

     சில இடங்கள் விறு விறுப்பாகவும் .. பல இடங்கள் மெதுவாகவும் செல்கிறது... கிளைமாக்ஸ் ஒரு த்ரில் இல்லாமலேயே முடித்து விட்டார் கே வி ஆனந்த். படத்தில் வரும் அணைத்து சண்டை காட்சிகளும் அருமை.. லாஜிக் மிஸ்ஸிங் நெறயவே இருக்கிறது.. 

    இரண்டாம் பாதியில் நிறைய technical விஷயங்கள் சொல்கிறார்கள்.. செராய்ட்ஸ்.. அதோட விளைவுகள். அதோட ஆராய்ச்சி. இதற்கு பின்னல் இருக்கும் சில நாடுகள்... கடைசி ட்விஸ்ட் நம்ம சூர்யாவே ஒரு failure டெஸ்ட் ட்டுபு பேபி.. 

பிளஸ்:

கதை
ஒளிப்பதிவு(அனைத்து பாடல்களும் அருமை,கால்முளைத்த பூவே தவிர)
சூர்யா
வில்லன்
சண்டை காட்சிகள்

மைனஸ்:

தள்ளாடும் திரைக்கதை
முதல் பாதிக்கு ஈடுகொடுக்க முடியாத இரண்டாம் பாதி
இசை(பின்னனி இசை மக மட்டம்,காக்க காக்க,வேட்டையாடு விளையாடு இசை மாதிரியே இருக்கு)
லாஜிக் மீரல்கள்

எதிர்பார்க்கபடும் ரேட்டிங்

ஆனந்த விகடன் -43
குமுதம்-ஓகே


   படம் முடிந்த உடன் எனக்கு ஓகே அவரேஜ் என்ன தோன்றியது.. என் நண்பர்கள் சிலர் second half மொக்கை என்ன கருத்து தெரிவித்தார்கள். 

என்னளவில் 'கோ' தான் கே வி ஆனந்த்-ன் உச்சம்.


கதை பற்றி எதையும் எழுதவில்லை.. அதனால் எல்லோரும் படிக்கலாம்.





No comments:

Post a Comment