Sunday 2 December 2012

Life Of Pi-விமர்சனம்

   ஹீரோவோட குடும்பம் பாண்டிசேரில இருக்கு.அவங்க அப்பா Zoo மாதிரி மிருகங்களை வச்சி கண்காட்சி வச்சி நடத்துராரு.அந்த இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது.எனவே அதை காலி பன்ன சொல்றாங்க.அதனால அவங்க கனடாவுக்கு கெலம்புராங்க.எல்லா விலங்குகளுடன் கப்பல்ல போறாங்க.

    கப்பல்ல போகும்போது புயல் காரணமா கப்பல் விபத்துக்குள்ளாகுது.அதுல ஹீரோவோட பெற்றோர்களும்,சில விலங்குகளும் பலி ஆகிடுது.மீதி தப்பி பிழைப்பது,உராங்குட்டான்,புலி,எலி,ஹீரோ மட்டுமே.எல்லாம் படகுல போறாங்க.அதுல நடக்குற சாகச பயணம் தான் இந்த Life of pi.

     படத்தை எடுக்கும் போதே ஆஸ்கர் அள்ளிடனும்னு முடிவு பண்ணி தான் பட,ம் எடுத்துருப்பார் போல அவார்ட் வாஙுவது உறுதி.செமையான துணிச்சலான கதை,மசால படங்களை பார்த்த கண்களுக்கு ஒரு விஸுவல் ட்ரீட் இந்த படம்.ஒளிப்பதிவு அள்ளுது.அவ்ளோ நேர்த்தி.

   ஹீரோ சுராஜ் வர்மா,அப்டியே கேரக்டராவே மாறிட்டார்.கேரக்டெருக்காக இருவிதமான உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார்.ஹீரோயின் ஸ்வரந்தி,அம்மாவாக தபு தன் பங்கினை சரிவர செய்துள்ளனர்.

இயக்குனர் ஆங் லீ.ஹல்க் படத்தின் இயக்குனர்.இசை அருமை தான் என்றாலும் ARR இசை அமைத்திருந்தால் இன்னும் அருமையாக் இருந்திருக்கும்.ஒளிப்பதிவு,3டி எஃப்ஃபெக்ட்,கிராஃபிக்ஸ் இந்த 3பிரிவில் ஏதேனும் ஒரு பிரிவில் ஆஸ்கார் நிச்சயம்.

  அழகிய ரசனை உள்ளவர்கள்,ஒளிபதிவுக்காக படத்தை பார்ப்பவர்கள் ,மாறுபட்ட சிந்தனை உள்ளவர்கள் கண்டிப்பாக் பார்த்து ரசிக்கும் படியான திரைப்படம்.

   நான் சாதாரண தியேட்டர்ல தான் பாத்தேன்.3டி வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள் அற்புதமான அனுபவம் கிடைக்கும்.

No comments:

Post a Comment