Friday 21 September 2012

சாருலதா

                சாருவும் ,லதாவும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள்.பிறந்ததில் இருந்தே அவர்களை பிரிக்கலை.இவ்விருவர்களுக்கும் பருவம் அடந்தபின்(19 வயசு) ல இசை மேல் தாகம் ஏற்படுது அதனால் வயலின் கத்துகிராங்க.அங்க தான் நம்ம படத்தோட ஹீரோவும் வயலின் கத்துக்க வராரு.

                                 
2 பேருக்குமே ஹீரோவ பிடிச்சி போக,இருவருமே லவ்வுராங்க...ஆன நம்ம ஹீரோ யோக்கியசிகாமணி போல அவருக்கு சாருவதான் பிடிக்குது.இது லதாவுக்கு கடுப்புகளை கெளப்புது.ஹீரோவ பாக்க போக கூடாதுனு தடா போடுரா.எப்ப சாமி இந்த வேலையே வேணாம் நம்ம இருவரும் ஆபரேட் பன்னி பிரின்சிடலாம் நு ஒரு முடிவுக்கு வரா சாரு.

    ஆபரேசன்ல அசம்பாவிதமா லதா செத்து போயிடுரா.சனியன் விட்டுச்சினு அவங்க அம்மாவ விட்டு லிவிங் டுகெதர் ஆ காஷ்மீர் ல போயி ஹீரோவும் ஹீரோயினும் வாழ்ந்து வராங்க.அம்மாவுக்கு உடம்பு சரி இல்லனு செய்தி வருது.அதனால சொந்த ஊருக்கு வரா சாரு...

      வந்த இடத்துல தான் நடக்குது அந்த அசம்பாவிதம்.சந்திரமுகி,13பி போல பேயா வந்து சாருவ பயமுருத்துரா செத்துபோன லதா.

      கேட்க பழய கதை போல இருந்தாலும் விருவிருப்பு,ட்விஸ்ட் குறையகூடாதுனு பல மேட்டர சொல்லாம் விட்டுருக்கேன்.திகில் படத்துல இதுக்கு மேல கதை சொன்னா படம் பாக்குரப்ப அந்த கிக் போயிடும்.

        இந்த படத்துல மிகவும் பாரட்ட வேண்டிய ஒரு ஆளு யாருனா நம்ம பிரியாமணி தான்.பருத்திவீரனுக்கு அப்புரம் பிரியா மணிக்கு அமஞ்ச ஒரு நல்ல கேரக்டர்.வழக்கமா நம்ம பாத்த குடும்ப பாங்கான பிரியாமணி அப்புரம் வில்லி கேரக்டர் ல வர பிரியாமனி யப்பா பட்டையகெளப்புராங்க.....படையப்பா ரம்ய கிருஷ்ணன்,மன்னன் விஜயசாந்தி அளவுக்கு நடிச்சி வெளுத்து வாங்கிட்டாங்க....

     டாக்டரா சீதா,அம்மாவா சரண்யா அருமையா நடிச்சிருக்காங்க....திகில் படம் விரும்புவர்கள் கொண்டாடும் படமாக இது அமையும்.அனைவரும் பெண்களுடன் பார்க்க ஏற்ற கண்ணியமான திகில் படம்.

ப்ளஸ்:

1) பிரியாமணி(வில்லத்தனம்)
2)திரைக்கதை
3)ஒளிப்பதிவு
4)இடைவேளைல வர கண்ணாடி சேப்பில் முத்துமணி கூடும் காட்சி
5)பேய் படம் என்பதால் ரத்தம் ,கோரமான முகம் காட்டமல் இயல்பாய் எடுத்திருக்கும் யுக்தி


மைனஸ்:

1) வேகமான திரைக்கதைல தேவை இல்லாம வெருப்பை உன்டாக்கும் காமெடி போர்சன்.திகில் படத்துல எதுக்கையா இந்த பாடல்கள்,காமெடிலாம்.

2)மந்திரவாதி,சூனியம் இது போன்ற தேவையற்றவைகளை நீக்கீருக்கலாம்(இதை நான் ஏன் சொல்ரேனு நீங்க படம் பாத்துக்கு அப்றம் தெரியும்)

இயக்குனர் நினைச்சிருந்த இதை வாலி படத்தோட உல்டா வெர்சன் நு சொல்லி ஏமாத்திருக்கலாம்.ஆன முரையா இது அலோன் என்ற ஹாலிவுட் படத்தின் உரிமையை பெற்று எடுத்த படம்னு அனுமதியோட எடுத்து இருக்கார்.(மிஸ்கின்,கே.வி.ஆனந்த்லாம் பாத்து கத்துக்குங்கபா)

எதிர்பார்க்கபடும் மதிப்பெண்

ஆனந்த விகடன் - 44
குமுதம்- நன்று
பிஹைண்ட் உட்ஸ்-3.5

No comments:

Post a Comment