Sunday 9 September 2012

முகமூடி_விமர்சனம்



முகமூடி

ரொம்பவே சாதரணமான கதைதான்...கதாநாயகன் ஜீவா, வழக்கம்போல வேலவெட்டி எதுவும் இல்லாத தண்டச்சோறு.
அவர் செல்வா மாஸ்டரிடம் குங் பூ கற்றுக்கொள்கிறார்.

சென்னைப்போலீஸை வெண்ணையாக நினைத்து, நரேன் என்ற முகமூடி கொள்ளைக்காரன் கொலை, கொள்ளை என்று அட்டகாசம் புரிகிறான்.

இதைத துப்புத்துலக்குவதற்காகவே நியமிக்கப்படும் கமிஷனர் நாசர், கையைப்பிசைந்துகொண்டு நிற்க, பஞ்சத்துக்கு முகமூடிபோட்ட ஜீவா, பரம்பரையாக முகமூடிபோட்ட நரேனின் கதையை முடிக்கிறார்.

இடையில் மானே, தேனே, பொன்மானே போட்டுக்கிற மாதிரி, லவ் டூயட், குழந்தைகள் கடத்தல், பார் சாங் போன்ற சகலமும் உண்டு...

நரேன் என்ன கார்ப்பெண்டரா எப்பபாத்தாலும் கைல சுத்தியலோட வராரு,ஜீவாவுக்கு பிஞ்சி மூஞ்சி பஞ்சு வாயி அதனால சூப்பர் ஹீரோக்கு(NEP getup laye irukkurathu) கொஞ்சம் நெருடல்....ஹீரொயின் சூப்பர்,நாசர் வழக்கமான தன் பணியை அருமையாக செய்துள்ளார்,..

1 பாதி காமெடி,சண்டை நு விருவிருப்பாபோனாலும் 2ஆம் பாதி குழப்பமான மனநிலையில் மிச்கின் எடுத்திருப்பது தெளிவா தெரியுது..அதனால 2ஆம் பாதி சுமாரா இருக்கு....

ப்ளஸ் பாயிண்ட்:
1) கே இசை(மிரட்டலான பாடல்கள்,பின்னனி இசை....)
2)சத்யா ஒளிப்பதிவு(80%இருட்டில் தான் அருமையான ஒளிப்பதிவு,
3)படத்துல ஒபனிங் நொறுக்கி தள்ளிடாங்க பா .....

மைனஸ் பாயிண்ட்:
1)ரொம்பவே வீக் ஆன கதை(சின்னகௌண்டர் ல அரம்பிச்சி வாமனன் வரைக்கும் இதே கதை தான்)
2)எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதது


மொத்ததில் சித்திரம்பேசுதடி,அஞ்ஜாதே,நந்தலாலா ,யுத்தம் செய் படம் எடுத்த மிஸ்கின் ஆஹ இத எடுத்ததுனு கேக்க வைக்கிரார்....படம் பாத்தா தியேட்டர்ல பாருங்க...சீடி ல அந்த அளவுக்கு எஃபெக்ட் இருக்காது......

எதிர்பார்க்கபடும் மதிப்பெண்:
ஆவி- 42
குமுதம்-ஓகே
b.woods-2.75


1 comment: