Sunday 9 September 2012

பாகன் விமர்சனம்


               வாழ்க்கையில் மிகச் சுலபமாய் பணக்காரன் ஆக முயற்சி செய்யும் ஆர்வமான இளைஞனான சுப்ரமணியின்(ஸ்ரீ காந்த்) கதை தான் இந்த பாகன். 
              வழக்கம் போல உடன் ரெண்டு நண்பர்கள். பணத்திற்காக ஒரு பணக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து செட்டிலாகலாம் என்று நினைத்து ஜனனி ஐயரை காதலிக்க, அவரோ சொத்தெல்லாம் வேண்டாம் என்று எல்லாத்தையும் கழட்டிப் போட்டுவிட்டு வந்துவிடுகிறார். தனக்கு பணம் தான் முக்கியம் என்று காதலை மதிக்காத சுப்ரமணிக்கு பின்னால் தான் தெரிகிறது. அவள் தன்னை எவ்வளவு காதலித்திருக்கிறாள் என்று. பின்பென்ன.. அவர்கள் எப்படி சேருகிறார்கள் என்பதை ஒரு சைக்கிளின் பார்வையில் சொல்லியிருக்கிறார்கள்.


        ஸ்ரீகாந்தின் நண்பர்களாய் சூரியும் பாண்டியும் வருகிறார்கள். பல இடங்களில் இவர்கள் காமெடி செய்கிறேன் என்று பேசிக் கொண்டேயிருப்பது எரிச்சலாய் இருக்கிறது. பல இடங்களில் பாவம் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்று  வருத்தமாகவும் இருக்கிறது.    தக்காளி எக்ஸ்போர்ட் செய்கிறார்கள், கோழிப் பண்ணை வியாபாரம் செய்கிறார்கள் அதில் எல்லாம் எப்படி தோற்கிறார்கள் என்று காமெடியாய் சொல்கிறேன் என்று இம்சை படுத்துகிறார்கள்.பாண்டியாவது பரவாயில்லை, சூரி இவர் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பது கொஞ்சம் எரிச்சலாகவேயிருக்கிறது.
 
     சைக்கிள் கதை சொல்வது போல அமைத்திறுப்பது புதிய அனுபவம் தான் என்றாலும் அது ஏனோ நம்மை நெருடலுக்கு உள்ளாக்குகிறது.நம்முடைய பொறுமைய ரொம்பவே சோதிக்கிறதுக்காகவே இந்த படத்த எடுத்துருப்பாங்க போல,திரைகதை ஓட்டம் ரொம்ப மோசம்.அ.வெங்கடேஷ் வில்லனா வராறு ஆனா நடிப்பிற்கான வாய்ப்பு மிக குறைவு.சூரி அந்த மனுசன காமெடி நடிகனு யாரோ சொல்லிடங்க போல அதுக்காக அவரு ரொம்ப கஷ்ட படுராறு...கூடவே தியேட்டர்ல இருக்க எல்லாம் கஷ்ட படுரோம்.

    ரொம்பவே லாஜிக் மீரல்கள் இருக்கு அத எல்லாம் எழுதினா டைம் தான் வேஸ்ட் ஆகும்...காமெடி படத்துல லாஜிக் பாக்க கூடாது தான்..ஆனா இந்த படம் பத்துதான் சிரிப்பே வரலயே அதனால லாஜிக் பாக்குரதுல தப்பில்லை....


எதிர்பார்க்க படும் மதிப்பெண்:
ஆனந்தவிகடன்: 38
குமுதம்:ஓகே
behind woods:2/5

No comments:

Post a Comment