Friday 30 November 2012

நீர்பறவை-விமர்சனம்

               ஹீரோ ஒரு சரக்கு பார்ட்டி,எப்ப பாத்தாலும் குடி குடினு ஊர சுத்துர ஆளு,குடிக்காக யார்கிட்டயும் கையேந்தகூட தயங்காதவர்.அம்மா அப்பா ஒரு மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள்,ஹீரோயின் சர்ச்ல ஒர்க் பண்றாங்க,ஹீரோயினை பார்த்ததும் ஹீரோ லவ்விங்.குடிக்கு அடிமை இப்ப காதலுக்கும் ஆகிறார்.

                  ஹீரொவை குடி ஹாஸ்பிடல்ல சேத்து குடில இருந்து மீட்குராங்க.இப்ப ஹீரோயின் ஹீரோவ கடல்ல போய் மீனவர்களோட சேர்ந்து மீனவரா ஆகுங்கனு சொல்றா.ஆன ஹீரோவ மீனவர்கள் கடக்கு போக அனுமதிக்கல,ஏன்னா ஹீரோ மீனவர் கிடையாது அவர் ஒரு அனாதை தத்துபிள்ளை,அவர் காத்லிக்காக மீனவர் ஆகுரார இல்லையா என்பதை சொல்லவரும் படம் தான் இந்த நீர்பறவை.

               ஹீரோவாக விஷ்ணு நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம்,ஆனா குடிகாரன் போன்ற நடிப்பு இவரு முகத்துக்கு செட் ஆகல,ஹீரோயின் சுனைனா செம நடிப்பு இயல்பா இருக்காங்க,இவரின் வயதான தோற்றதுக்கு நந்திதா தாஸ் செம தேர்வு,ஆனா இவங்களுக்கு நடிக்க வாய்ய்ப் கம்மி தான்.வழக்கமான அம்மா கேரக்டெர் சரண்யாவுக்கு பிரிச்சி மேயுது இந்த ஆண்டி,பையன் குடிக்க காசு கேக்கும் பொது இவரின் நடிப்பு அற்புதம்.சமுத்திரகனி வருவது கொஞ்சம் தான் என்றாலும் மனதில் நிற்கிறார்.

               கண்ணியமான காதல் கதை,நேர்த்தியான திரைக்கதைதான் இருந்தாலும் சொன்ன விதம் இன்னும் அழுத்தம்மாக கூறி இருக்கலாம்.மீனவர்கள் பற்றிய படம் என எதிர்பார்த்து செல்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.மிகபெரிய பலம்(வசனம்.பாடல்கள்,ஒளிப்பதிவு)


எதிர்பார்க்கபடும் ஆனந்தவிகடன் ரேட்டிங்-43
குமுத,-ஓக்கே

Tuesday 13 November 2012

துப்பாக்கி விமர்சனம்


              வருங்கால சி.எம், கனவுல இருக்க விஜயகாந்த் இதுவரை 37 படங்களில் நடித்து அடிச்சி துவைத்த கதை தான் என்றாலும் ARமுருகதாஸ் தன் திரைகதை யுத்தியால் வித்யாச படுத்துகிறார்.

             ஹீரோ ஒரு மிலிட்டரி ஆபிசர்,விடுமுரையை கழிக்க மும்பையில் உள்ள தன் வீட்டிற்க்கு வருகிறார்,அங்கே காதலும் பாமும் வெடிக்குது,காதலுக்கு காரணமான காஜலை சில பல மொக்கையான காட்சிகளின் பின்னனியில் கைபிடிப்பது ஒருபுறமும்,பாமுக்கு காரணமான ஸ்வீப்பர் ஸெல்லை சேர்ந்த ஒருவனை பிடிக்கிறார் ஹீரோ,அவனை வைத்து ஒட்டுமொத்த தீவிர வாத கும்பலையும் பிடித்து தேசத்தை காப்பாற்றுகிறார் ஹீரோ.

            வழக்கமான தமிழ் சினிமா பானையை விட்டு விழகாத கதை தான் என்றாலும் திரைகதையில் அற்புதமாக விளையாடி இருக்கிறார் இயக்குனர்.

           வில்லன் படத்துக்கு பொறுத்தமானவர்,பில்லா2 வில் எதிர்பாத்ததை இதில் பூர்த்தி செய்துள்ளார்.காஜல் வரும் இடங்களில் சிரிப்பு வெடி இந்த படத்தில் விஜய்க்கு பதில் இவரே காமெடி பண்ணி ஸ்கோர் பன்றாங்க,சத்யன் சில சமயம் கலகல்ப்பு ஊட்டினாலும்,ஜெயராம் வரும் காட்சியில் தூக்கம் தான் வருது.

           சந்தோஷ் சிவன் கேமெரா ஆங்கிள் அஹ் பத்தி நான் சொல்ரதுக்கு ஒன்னுமில்ல,மனுசன் பூந்து விளையாடுராரு..

விஜய்,நடிப்பு,துடிப்பு,கோபம்,சந்தோசம் எல்லாம் காட்டுராறு ,ஆன இவரு பண்ர சில பல ஸ்டைல்ஸ் தல பண்ரது போல இருக்கு..

படத்தில் ஹைலைட்டான காட்சிகள் 3;

1.12 ஸீவீப்ப்ர் ஸெல் தீவிரவாதிகளை ஒரே நேரத்தில் கொல்லும் அந்த காட்சி
2.தங்கச்சிய பணயம் வச்சி அந்த கும்பல பிடிகிறது
3.கிளைமாக்ஸ் சண்டை

பிளஸ்:
திரைக்கதை
விஜய் பஞ்ச் டயலாக் இல்லாம அமைதியான நடிப்பு
ஒளிப்பதிவு

மைனஸ்:
ஏகப்பட்ட லாஜிக் மீரல்கள்
( எ.கா.படத்துல முக்கியம்மான காட்சி 12 ஸீலீப்பர் ஸெல் அஹ இருக்கவன் போலிஸ்ட இருந்து தப்பிச்சிடுரான்..அப்ரம் அவன் ஃபாலோ பண்ணி புடிக்கிற சீன்ல,ஒரு தேட பட்டு வரும் தீவிரவாதி தெருவுல ஹாய நடந்து போரான்,ஏன் மும்பைல போலிஸ் இல்லய...இப்டி தான் அஜ்மல் கசாப் போனாலும் விட்ருவாங்களா...)

தேவை இல்லாம் தினிக்க பட்ட பாடல்கள்(விஜய் கேட்டு வாங்கிருப்பாரு போல)

கிளைமாக்ஸ்ல ஒரு டிவிஸ்ட்டு இருக்கு இருக்கு நு சொல்லி எங்களுக்கு டிவிஸ்ட்டு கொடுத்தது..

எதிர்பார்க்கபடுபவை:

ஆனந்த விகடன் - 44
குமுதம்-ஓக்கே


போக்கிரிக்கு கீழே,நண்பன்,வேலாயுத்திற்க்கு மேல..படம் குடும்பத்துடன் பாக்கலாம்.