Friday 14 September 2012

சுந்தர பாண்டியன் விமர்சனம்



ரொம்ப நாளுக்கு அப்புரமா ஒரு கண்ணியமான கிராமத்து கதை...அஜித்,விஜய்போல இவரும்(சசி) தனக்கென ஒரு ஃபார்முலா வகுத்து உள்ளார் போல,நண்பனின் காதலுக்கு கைகொடுக்க நினைப்பது...இந்த முறையும் அதில் வெற்றி தான்....

      ஹீரோயின் ரெகுலரா தேனி 2 உசிலம்பட்டி பஸ்ல போயிட்டு வராங்க,பஸ்ல போனாவே நல்ல ஃபிகரா இருந்தா லவ்வும் சேர்ந்தே பயணிப்பது தெரிஞ்ச விசயம் தான் இதுலயும் அப்படி தான்,ஹீரோயின ஹீரோவோட ஃபிரண்ட் 5மாசமா லவ்வுன்ற பேருல சைட் அடிச்சிடு இருக்காரு,அவ கிட்ட லவ்வ சொல்ல தைரியம் இல்லாம ஹீரோவோட உதவிய நாடுராரு,அவன மாதிரியே இன்னொருத்தனும் (சசியோட நண்பனின் நண்பன்) 7 மாசமா அந்த பொண்ண லுவ்வுரான்,இதுக்கும் சசியவே  அவன் நாடுரான்.

இதனால ஒரு டீலிங் வச்சிகிராங்க...7 மாசமா லவ்வுனவன் மருபடியும் 1 மாசம் தொடர்ந்து பாக்கனும்செட் ஆகலன விடுடனும்,ஆனா செட் ஆகல. இந்த முறை 5 மாசமா லவ்வுனவன் டர்ன்..இப்டியே இடைவேளை வரைக்கும் போகுது இதெல்லம் அட்டகத்திலயே பாத்தமாதிரி இருக்குமே...


     
இப்பதான் படத்துல பெரிய டிவிஸ்ட்டே.....ஒரு ஃபிளாஸ்பேக்,ஹீரோ தான் முதல்ல ஹீரோயிண்ட லவ்வ சொன்னது,சொன்னப்ப ஹீரோயின் மைனர் அதனால லவ்வ ஒத்துக்கல,இப்ப மேஜர் ஆயிட்டு அதனால ஹீரோ மேல அவங்களுக்கு லவ்வாயிடுது(இதுக்கு தான் பொண்ணூ நல்லயிருந்த ஒரு கர்சிப் மாதிரி எதாவது போட்டு வைங்க 1 போரவங்களூக்கு தான் முன்னுரிமை தராங்க)....இதனால ஹீரோவோட ஃப்ரண்டோட ஃபிரண்ட் இத ஒத்துகல ஹீரோயின் ட தகராரு பன்றான்.இதுனால ஹீரோக்கும் ஃப்ரண்ட்க்கும் தகராரு வருது அதுல பஸ்ல இருந்து கீழவிழுந்து செத்து ஹீரோவ கொலகேஸுல மாட்டிவிடுரான்...

இடைவேளைக்கு அப்புறமா முக்கியமான சம்பவங்கள் தொகுப்பு இருக்கு அத சொன்னா சுவாரஸ்யம் போயிடும்...அப்றம் என்ன ஹீரோ ஹீரோயின் சேந்தாங்கல?கொலை பழியில் இருந்து தப்பித்தார போன்ற கேள்விகளுக்கு பல்வேறு திருப்பத்துடம் விருவிருப்பாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த சுந்தரபாண்டியன்.

ப்ளஸ்:
படதின் மிகபெரிய பலம் திரைக்கதை தான்(வெல்கம் ப்ரபாகரன்),
கதை மாந்தர்கள் தேர்வு அற்புதம்,
ஹீரோயின் சும்மா நச்சுனு இருக்கு குடும்ப பாங்கு(இத தான்யா இவ்ளோ நாளா தேடுரோம் 15 வயசு தான் ஆகுதாம்),
இசை(ரகுனந்தன் அருமையான இசை),
சூரி(காமெடி),அப்புக்குட்டி(என்னா வில்லத்தனம்)

மைனஸ்:
படத்தின் கதைக்கு சசி ரஜினி ரசிகரா வரதுக்கும் சம்மந்தமே இல்ல.எதுக்கு இந்த விளம்பரம்,
இடைவேளைக்கு அப்றம் லைட்டா சுப்ரமனியம் சயல் வருவதுபோல எனக்கு தோனுது நீங்க பாத்துட்டு சொல்லவும்,
வேர எதும் எனக்கு மைனசா தெரியல இருந்தா என்னோடு பகிரவும்

மொத்ததில்,காமெடி எண்டெர்டெயிமெண்ட்+திரில்லர்=சுந்தரபாண்டியன்

எதிர்பார்ப்பு:

ஆவி:44
குமுதம்:நன்று
பி.உட்ஸ்:3.25

1 comment:

  1. neeyae solteella???apram enna torrent'la thaediravaendithuthaan

    ReplyDelete