Friday 28 September 2012

தாண்டவம்-விமர்சனம்

        ஹீரோ ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி இந்தியாவில் உள்ள டாப் 5 ஆபிஸர் ல அவரும் ஒருத்தர்.தீவிரவாதிகள்,உளவாளிகளை பிடிக்கும் ப்ராஜெக்ட் அவருக்கு கொடுக்கபடுகிரது.அதற்க்குள் வீட்டில் இருந்து அவருக்கு அழைப்பு வருகிறது,இன்னும் 2 நாளில் கல்யாணம்னு சொல்றாங்க...ஹீரோக்கு கல்யாணம் பண்ணிக்க பிடிக்கல அதனால் டும் டும் டும் மாதவன் மாதிரி கல்யாணத்த நிறுத்த திட்டம் போடுறார் அதுவும் ஹீரோயின பாக்குர வரை மட்டும் தான்.

   கல்யாணம் ஆகிடுது.ஹீரோ என்ன நினைச்சாரோ அதயே ஹீரோயினும் சொல்ராங்க...2 பேருக்கும் பழக்கமே இல்ல ஸோ இதெல்லாம் இப்ப வேணாம் நல்லா புரிஞ்சிக்கிட்டு அப்றம் வச்சிகலாம் நு முடிவு பன்றாங்க..

    மவுன ராகம் கணக்கா தொட்டும் தொடாமல் வாழ்கின்றனர்.பட்டா போட்டும் வீடு கட்டாம இருப்பது போல வாழ்ராங்க.. இதன் இடையில் ஹீரோ தன் புராஜெக்ட் காரணமா லண்டன் போராறு கூடவே மனைவியயும் கூட்டிடு போறாரு..அங்கே வில்லணுக்கும் தனக்கும் நடக்கும் மோதலில் ஹீரோயின் அவுட்,ஹீரோ 2 கண்ணும் புஸ் ஆகிடுது.

      அந்த 5 வில்லன்களையும் எக்கோலொகேஷன் யுக்க்தியை பயன் படுத்தி அந்த கண் பார்வையற்றவர் பழிவாங்கும் வழக்கமான கதையை பிரம்மாண்டமான கிரைண்டரில் போட்டு அரைத்து இருக்கிறார் விஜய்.

      முதல் பாதியில் கொலைகளை செய்யும் குருடராகவும்,இரண்டாம் பாதியில் ஐ.பி.எஸ் அதிக்காரிக்கான மிடுக்குடனும் அருமையான நடிப்பை பதிவு செய்கிரார் சீயான்.விக்ரம்.

      அனுஷ்கா ஆரடி ஆப்பிள் போல வருகிறார்.கல்யாண்கோலத்தில் தேவதையாக கண்களுக்கு காட்சி தருகிறார் என்றால் அது மிகை அல்ல.
 கிராமத்து குசும்புடன் இவர் வரும் காட்சிகளில் கைதட்டல் தியேட்டரயே சும்மா அல்லுது..பெட்ரூம்ல விக்ரமை கண்ணால் சைகை காட்டி கூப்பிடும் காட்சியில் என் அருகில் இருந்த ஒருவர் எழுந்தே விட்டார்..அவ்வளவு நேர்தியான நடிப்பு.இவ்ளோ அழகான ஃபிகருக்காக தமிழன் எப்படி ஏங்கி போய் கிடக்குரானு அப்ப தான் தெரிஞ்சது.


  
      எமி ஜாக்ஸன் சிலீவ்லெஸும் டைட் ஜீனுடன் முதற்பாதியில் விக்ரமுடன் சுற்றுகிரார்.லக்ஷ்மிராய் நடிப்பதற்க்கு வாய்ப்பில்லை.சந்தானம் காமெடி போர்சன் குறைவு என்றாலும் அவர் வரும் போதெல்லாம் தன் பங்கிற்க்கு சிக்ஸரும் ஃபோருமாக அடித்து நொருக்குகிறார்.

    நாசர் கொலை வழக்கை விசாரிக்கும் போலிஸ் ஆபிசர் வேடத்திற்க்கு கன் கச்சிதமாக பொருந்துகிறார்.மேலும் சில பல நடிகர் பட்டாளத்துடன் விக்ரம் விஜயின் உதவிடன் ஆடியிறுக்கும் தாண்டவம் தான் இந்த திரைப்படம்.
                      
பிளஸ்:
விக்ரம் நடிப்பும் பாடிலாங்குவேஜும் பிராமாதம்,
அனுஷ்கா,சந்தானம் வரும் காமெடி(விசாரனை செய்யும் இடம்)
நீரவ் ஷா(ஒளிப்பதிவு அருமையப்பா..)
ஜீ.வீ.பிரகாஷ் பாடல்களிலும்,பிண்ணனி இசையிலும் வெளுத்து கட்டிடார்(ஐ லவ் யு ஜீ.வீ)

மைனஸ்:
கஜினி+போர்களம் படத்தை கலந்து கொடுத்திருப்பது,
ரொம்ப நீளமா போரமாதிரி ஒரு ஃபீலிங்கு
அடுத்து என்ன நடக்க போகுதுனு ஈசியா யூகிக்கிற திரைக்கதை


எதிர்பார்க்கபடும் ரேட்டிங்ஸ்

ஆனந்தவிகடன்      -  43
குமுதம்                       -   ஓ.கே
பிஹிண்ட்வுட்ஸ்    -     2.75


ஆஹா ஓஹோ என சொல்லும்படியான படமும் இல்லை அதே நேரத்தில் மொக்க படமும் இல்ல...டைம் பாசுக்கு ஒரு நல்ல படம்.குடும்பத்துடன் பார்க்கலாம்.


Friday 21 September 2012

சாருலதா

                சாருவும் ,லதாவும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள்.பிறந்ததில் இருந்தே அவர்களை பிரிக்கலை.இவ்விருவர்களுக்கும் பருவம் அடந்தபின்(19 வயசு) ல இசை மேல் தாகம் ஏற்படுது அதனால் வயலின் கத்துகிராங்க.அங்க தான் நம்ம படத்தோட ஹீரோவும் வயலின் கத்துக்க வராரு.

                                 
2 பேருக்குமே ஹீரோவ பிடிச்சி போக,இருவருமே லவ்வுராங்க...ஆன நம்ம ஹீரோ யோக்கியசிகாமணி போல அவருக்கு சாருவதான் பிடிக்குது.இது லதாவுக்கு கடுப்புகளை கெளப்புது.ஹீரோவ பாக்க போக கூடாதுனு தடா போடுரா.எப்ப சாமி இந்த வேலையே வேணாம் நம்ம இருவரும் ஆபரேட் பன்னி பிரின்சிடலாம் நு ஒரு முடிவுக்கு வரா சாரு.

    ஆபரேசன்ல அசம்பாவிதமா லதா செத்து போயிடுரா.சனியன் விட்டுச்சினு அவங்க அம்மாவ விட்டு லிவிங் டுகெதர் ஆ காஷ்மீர் ல போயி ஹீரோவும் ஹீரோயினும் வாழ்ந்து வராங்க.அம்மாவுக்கு உடம்பு சரி இல்லனு செய்தி வருது.அதனால சொந்த ஊருக்கு வரா சாரு...

      வந்த இடத்துல தான் நடக்குது அந்த அசம்பாவிதம்.சந்திரமுகி,13பி போல பேயா வந்து சாருவ பயமுருத்துரா செத்துபோன லதா.

      கேட்க பழய கதை போல இருந்தாலும் விருவிருப்பு,ட்விஸ்ட் குறையகூடாதுனு பல மேட்டர சொல்லாம் விட்டுருக்கேன்.திகில் படத்துல இதுக்கு மேல கதை சொன்னா படம் பாக்குரப்ப அந்த கிக் போயிடும்.

        இந்த படத்துல மிகவும் பாரட்ட வேண்டிய ஒரு ஆளு யாருனா நம்ம பிரியாமணி தான்.பருத்திவீரனுக்கு அப்புரம் பிரியா மணிக்கு அமஞ்ச ஒரு நல்ல கேரக்டர்.வழக்கமா நம்ம பாத்த குடும்ப பாங்கான பிரியாமணி அப்புரம் வில்லி கேரக்டர் ல வர பிரியாமனி யப்பா பட்டையகெளப்புராங்க.....படையப்பா ரம்ய கிருஷ்ணன்,மன்னன் விஜயசாந்தி அளவுக்கு நடிச்சி வெளுத்து வாங்கிட்டாங்க....

     டாக்டரா சீதா,அம்மாவா சரண்யா அருமையா நடிச்சிருக்காங்க....திகில் படம் விரும்புவர்கள் கொண்டாடும் படமாக இது அமையும்.அனைவரும் பெண்களுடன் பார்க்க ஏற்ற கண்ணியமான திகில் படம்.

ப்ளஸ்:

1) பிரியாமணி(வில்லத்தனம்)
2)திரைக்கதை
3)ஒளிப்பதிவு
4)இடைவேளைல வர கண்ணாடி சேப்பில் முத்துமணி கூடும் காட்சி
5)பேய் படம் என்பதால் ரத்தம் ,கோரமான முகம் காட்டமல் இயல்பாய் எடுத்திருக்கும் யுக்தி


மைனஸ்:

1) வேகமான திரைக்கதைல தேவை இல்லாம வெருப்பை உன்டாக்கும் காமெடி போர்சன்.திகில் படத்துல எதுக்கையா இந்த பாடல்கள்,காமெடிலாம்.

2)மந்திரவாதி,சூனியம் இது போன்ற தேவையற்றவைகளை நீக்கீருக்கலாம்(இதை நான் ஏன் சொல்ரேனு நீங்க படம் பாத்துக்கு அப்றம் தெரியும்)

இயக்குனர் நினைச்சிருந்த இதை வாலி படத்தோட உல்டா வெர்சன் நு சொல்லி ஏமாத்திருக்கலாம்.ஆன முரையா இது அலோன் என்ற ஹாலிவுட் படத்தின் உரிமையை பெற்று எடுத்த படம்னு அனுமதியோட எடுத்து இருக்கார்.(மிஸ்கின்,கே.வி.ஆனந்த்லாம் பாத்து கத்துக்குங்கபா)

எதிர்பார்க்கபடும் மதிப்பெண்

ஆனந்த விகடன் - 44
குமுதம்- நன்று
பிஹைண்ட் உட்ஸ்-3.5

Wednesday 19 September 2012

தெரிந்த கதை-தெரியாத உண்மை

1.செப்டம்பர் 11 தாக்குதல்

இந்த சம்பவத்தை பற்றி அறியாமல் யாரும் இருக்க வாய்ப்பு இல்லை.இருப்பினும் இதில் உள்ள பல சுவாரஸ்ய தகவல்களை தான் இப்போது தர போகிரேன்..

சம்பவம் நடந்த தேதி - 11

மொத்தம் 4 ஜெட் கடத்தபட்டு அதன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது உஙளுக்கு தெரியும்,ஆனால் முதலில் தாக்குதலுக்கு உட்படுத்தபட்ட வாகனத்தின் பெயர் என்ன தெரியுமா? அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 11.

அதில் மொத்தம் பயனித்தவர்கள் எத்தனை தெரியுமா-11(விமான ஊழியர்)+76(பயணிகள்)+5(தீவிரவாதிகள்)=11+76+5=9+2=11

தாக்குதல் நேரம்-9.02am=11

தாக்க பட்ட ட்வின் டவரின் அமைப்பு கிட்டதட்ட 11 ஒத்தே அமையும்.அதயும் விட அந்த கட்டடத்தின் அடுக்குகளின் எண்ணிக்கை 110=11

இதுல இருந்து என்ன தெரியுதுனா பின்லேடன் தீவிரவாதி யா?இல்ல ஜோசியகாரனா?

இதவிட அவன் செத்தது 02-மே(05)-2011=11
அந்த 11ல அப்டி என்ன தான்யா இருக்கு



2.டாட்டு ஒட்டு முறையை பற்றியது..


இடது கைகளில் டாட்டு ஒட்ட்பவர்கள் தங்களை ஓரினசேர்க்கையளர்கள் என காட்டிகொள்ளவே வலது கைகளில் ஒட்டுகிறார்கள்.




3.நட்புக்கு உண்மையான உதாரணம்



யார் தெரியுமா? கர்ணனும் துரியோதனனும் தான்.

இதை ஒரு சம்பவதின் மூலம் விளக்கலாம்,


ஒரு சமயத்தில் கர்ணனும் துரியோதனன் மனைவியும் தாயம் ஆடி கொண்டிருந்தனர்,அப்போது அவள் தோற்றுவிடுவால் அதனால் கர்ண்ணன் அவள் மடியை பிடிப்பதால் அவள் மடியில் இருந்த முத்துமாலை அவிழ்ந்துவிழும் அதை துரியோதனன் பார்து..நன்பா அந்த முதுக்களை பொருக்கவா?அதை எடுத்து கோர்க்கவா..என் கேட்பான் ..இதை கர்ணன் படம் பார்த்த அனைவரும் அரிவீர்...

அவன் கூரிய வார்த்தையில் பொதிந்துல்ல உண்மை...

நண்பன் விளையாடி வீசிய பொருலையும் அவனுக்காக நான் எஙும் பொறுக்கி எடுப்பேன்,மற்றும் அவன் தன் மனைவியிடம் அவன் நடந்துகொண்டதுக்கு அவன் மேல் கோபம் இல்லை என்பதை கோற்கவா என்பதன் மூலம் தெளிவு படுத்தியுள்ளான்(கோபம் இருந்தால் பதற்றம் ஏற்படும் பதறினால் கைகள் நடுஙும் எனவே கோர்பது கடினமாகும்),....


மேலும் அடுத்த பதிப்பில் தெரிந்த கதைதெரியாத உண்மை தொடரும்....

Friday 14 September 2012

சுந்தர பாண்டியன் விமர்சனம்



ரொம்ப நாளுக்கு அப்புரமா ஒரு கண்ணியமான கிராமத்து கதை...அஜித்,விஜய்போல இவரும்(சசி) தனக்கென ஒரு ஃபார்முலா வகுத்து உள்ளார் போல,நண்பனின் காதலுக்கு கைகொடுக்க நினைப்பது...இந்த முறையும் அதில் வெற்றி தான்....

      ஹீரோயின் ரெகுலரா தேனி 2 உசிலம்பட்டி பஸ்ல போயிட்டு வராங்க,பஸ்ல போனாவே நல்ல ஃபிகரா இருந்தா லவ்வும் சேர்ந்தே பயணிப்பது தெரிஞ்ச விசயம் தான் இதுலயும் அப்படி தான்,ஹீரோயின ஹீரோவோட ஃபிரண்ட் 5மாசமா லவ்வுன்ற பேருல சைட் அடிச்சிடு இருக்காரு,அவ கிட்ட லவ்வ சொல்ல தைரியம் இல்லாம ஹீரோவோட உதவிய நாடுராரு,அவன மாதிரியே இன்னொருத்தனும் (சசியோட நண்பனின் நண்பன்) 7 மாசமா அந்த பொண்ண லுவ்வுரான்,இதுக்கும் சசியவே  அவன் நாடுரான்.

இதனால ஒரு டீலிங் வச்சிகிராங்க...7 மாசமா லவ்வுனவன் மருபடியும் 1 மாசம் தொடர்ந்து பாக்கனும்செட் ஆகலன விடுடனும்,ஆனா செட் ஆகல. இந்த முறை 5 மாசமா லவ்வுனவன் டர்ன்..இப்டியே இடைவேளை வரைக்கும் போகுது இதெல்லம் அட்டகத்திலயே பாத்தமாதிரி இருக்குமே...


     
இப்பதான் படத்துல பெரிய டிவிஸ்ட்டே.....ஒரு ஃபிளாஸ்பேக்,ஹீரோ தான் முதல்ல ஹீரோயிண்ட லவ்வ சொன்னது,சொன்னப்ப ஹீரோயின் மைனர் அதனால லவ்வ ஒத்துக்கல,இப்ப மேஜர் ஆயிட்டு அதனால ஹீரோ மேல அவங்களுக்கு லவ்வாயிடுது(இதுக்கு தான் பொண்ணூ நல்லயிருந்த ஒரு கர்சிப் மாதிரி எதாவது போட்டு வைங்க 1 போரவங்களூக்கு தான் முன்னுரிமை தராங்க)....இதனால ஹீரோவோட ஃப்ரண்டோட ஃபிரண்ட் இத ஒத்துகல ஹீரோயின் ட தகராரு பன்றான்.இதுனால ஹீரோக்கும் ஃப்ரண்ட்க்கும் தகராரு வருது அதுல பஸ்ல இருந்து கீழவிழுந்து செத்து ஹீரோவ கொலகேஸுல மாட்டிவிடுரான்...

இடைவேளைக்கு அப்புறமா முக்கியமான சம்பவங்கள் தொகுப்பு இருக்கு அத சொன்னா சுவாரஸ்யம் போயிடும்...அப்றம் என்ன ஹீரோ ஹீரோயின் சேந்தாங்கல?கொலை பழியில் இருந்து தப்பித்தார போன்ற கேள்விகளுக்கு பல்வேறு திருப்பத்துடம் விருவிருப்பாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த சுந்தரபாண்டியன்.

ப்ளஸ்:
படதின் மிகபெரிய பலம் திரைக்கதை தான்(வெல்கம் ப்ரபாகரன்),
கதை மாந்தர்கள் தேர்வு அற்புதம்,
ஹீரோயின் சும்மா நச்சுனு இருக்கு குடும்ப பாங்கு(இத தான்யா இவ்ளோ நாளா தேடுரோம் 15 வயசு தான் ஆகுதாம்),
இசை(ரகுனந்தன் அருமையான இசை),
சூரி(காமெடி),அப்புக்குட்டி(என்னா வில்லத்தனம்)

மைனஸ்:
படத்தின் கதைக்கு சசி ரஜினி ரசிகரா வரதுக்கும் சம்மந்தமே இல்ல.எதுக்கு இந்த விளம்பரம்,
இடைவேளைக்கு அப்றம் லைட்டா சுப்ரமனியம் சயல் வருவதுபோல எனக்கு தோனுது நீங்க பாத்துட்டு சொல்லவும்,
வேர எதும் எனக்கு மைனசா தெரியல இருந்தா என்னோடு பகிரவும்

மொத்ததில்,காமெடி எண்டெர்டெயிமெண்ட்+திரில்லர்=சுந்தரபாண்டியன்

எதிர்பார்ப்பு:

ஆவி:44
குமுதம்:நன்று
பி.உட்ஸ்:3.25

Wednesday 12 September 2012

விமர்சனம்


இப்போ நான் எழுதபோற பட விமர்சனம், நீங்க ஏற்கனவே பார்த்த படமா கூட இருக்கலாம். ஆனா, நான் கடைசியா பார்த்த படம் இது தான். அதனால இதையே விமர்சனம் பண்றேன் -


படத்துல வர்ற கேரக்டர்கள் -

நாயகன் - நம்மாளு, பெண்களை - 'சூப்பர் பிகர்', 'சுமார் பிகர்' மற்றும் 'அட்டு பிகர்' என நேர்த்தியாக பாகுபடுத்தும் வேலையை நண்பர்களோடு சேர்ந்து செய்கிறார். அவர் கண்களில் படித்து கொண்டிருக்கும் நாயகி பட, விடாமல் அவர் போகும் இடமெல்லாம் சென்று பாட்டு பாடி மனசை கரைக்கிறார்.

நாயகனின் நண்பன் - இவரை காதலுக்கு உதவுவதற்காகவே, அவர் வீட்டில் 'நேர்ந்து' விட்டிருக்கிறார்கள். எத்தனை அசிங்கப்பட்டாலும், அவமானப்பட்டாலும், கூச்சமில்லாமல் த்யாக உள்ளதோடு உதவி செய்கிறார், பின்னால் நின்று டான்ஸ் ஆடுகிறார், கடைசியில் வில்லனிடம் செம அடி வாங்குகிறார்.

நாயகி - இவர் கொஞ்சம் லூசு ! இவரோட பேர் மட்டுமில்ல, முகம் கூட சில வினாடிகளே வர்றதால மனசுல நிக்கல..ஆனா அதிக முறை காட்டப்படர இன்ன பிற விஷயங்கள் பற்றி இந்த ப்ளாக் ல பேசமுடியாது! (நம்ம கம்பெனி கொஞ்சம் டீசன்ட்டு). எப்டியோ காதல் வருது..

பெற்றோர்கள் - நாயகனின் பெற்றோர்கள் ரொம்ப நல்லவங்க. எப்டினா, படத்துல அப்பா பையனோட சேர்ந்து சரக்கடிப்பார். அம்மா சைடு டிஷ் கொண்டுவருவாங்க. முக்கியமா, 'அந்த பொண்ண என்ன ஆனாலும் கைவிட்டுடாத!' ன்னு சொல்லி அவனுக்கும் ஒரு லட்சியத்த(?) உருவாக்கறாங்க.

பெண்ணோட பெற்றோர் -இவர்கள் கெட்டவங்க. பொண்ணு தான் விரும்பிட்டாளேன்னு நினைக்காம, நிலையான வேலையில்லாத, நித்தம் சரக்கடிச்சு மட்டையாகும் ஒரு துடப்பக்கட்.. யை விரும்புவதா என்று அர்த்தமில்லாமல் கோவப்படுகிறார்கள். பணக்கார திமிர்தான், வேற என்ன?

வில்லன்- இவன் மார்கெட்டுக்கு வர்ற நாயகனோட தங்கைய கைய பிடிச்சு இழுக்கறான்.. இதே தானே ஆரம்ப காட்சில நாயகனும், நாயகிய பண்ணினான்னு கேட்காதீங்க. நாயகிக்கு அண்ணன் இல்ல. இந்த பொண்ணுக்கு இருக்கு. கடைசியில இந்த வில்லன் ஒரு அரசியல்வாதியோட தம்பி.. (சாரி, ஒரு ரவுடியோட மச்சான். சரி. ரெண்டுல எதோ ஒண்ணு )

சண்டை காட்சிகள் ஏராளம். ஆனால், பாவம் நம்ம ஹீரோ commerce group எடுத்து படித்ததால், நியூட்டன் பற்றி தெரிந்திருக்கவில்லை. புவியீர்ப்பு விசை, வீசம் என்ன விலை என்று கேட்கிறார். இருந்த இடத்திலிருந்து அப்படியே உயர பறந்து, பத்து பேரையாவது அடித்து விட்டு கிழே இறங்குகிறார்..வில்லனின் ஆட்கள் வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் பழக்கத்தை நமக்கு கற்றுத் தருகிறார்கள்.

பாடல்கள் : வசனம் அல்ல பாடல்கள் தான் என்று அவர்கள் ஆட தொடங்கும் போது புரிகின்றது. நாயகி, கொளுத்தும் சென்னை வெய்யிலில் ஜீன்சும், பனி மலைகளில் அரைகுறை ஆடையும் அணிகிறார்! (அதான் லூசுன்னு சொல்லியாச்சே?) இது தவிர ஒரு சோக பாடல் இருக்கின்றது - முதல் முறை கேட்கும் போது, நான் நாயகனுக்கு வயிற்று வலி தான் என நினைத்துவிட்டேன், ரொம்ம்ம்ம்ம்பவே முக்கி முக்கி பாடுகிறார்.




படத்தின் கதையை யாரோ ஒரு ட்விட்டர் தான் எழுதியிருக்க வேண்டும்.. 2 வரிகளுக்குள் வருமாறு யோசித்திருக்கிறார்.

காதலின் மகத்துவத்தையும், பணம் இல்லாமல் கூட இருக்கலாம் - குணம் இருந்தால் போதும்ன்னு கடைசி சீன்ல எல்லாரும் புரிஞ்சுக்கறாங்க. (குணத்த வச்சு கத்திரிக்கா வாங்கறதா ஒரு காட்சி வச்சிருக்கலாம் - இது என்னோட ஆதங்கம்). உபரியா, ஜாதி-மதம்-ஊழல் எல்லாம் ஒழியும் போது தான் நம்ம நாடு (தமிழ் சினிமாவும்) உருப்படும்னு ஒருமாதிரியா புரிஞ்சுக்கறோம்...

ஆங்!! படத்தோட பேரு விட்டுட்டேனே ? யோசிச்சு பார்த்தேன்.. ஒரே குழப்பம். நிறைய பட பேர் ஞாபகத்துக்கு வருது.. ப்ளீஸ், நீங்களாவது சரியான டைட்டில் கண்டு பிடிச்சு எழுதுங்களேன்.



நன்றி:

விக்னா@யமுனா(டிவிட்டர்)

இந்தியா


த்ரிஷா, கட்ரினா, ஐஸ்வர்யா - யாருடையது பெஸ்ட்??

அன்பான விளம்பரதாரர்களுக்கு,

ஒரு அப்பாவி குடும்ப தலைவி எழுதிக்கொள்வது..உங்கள் விளம்பரங்கள் அனைத்தும் தினமும் பார்க்கிறேன் (பார்க்க வைக்கிறீர்கள்). இவற்றை அப்படியே நம்ப வேண்டுமென்று தான் நினைக்கிறேன். ஆனால், என்னை சுற்றியுள்ளவர்கள் தான் நம்பவிடாமல் சதி செய்கிறார்கள்.

சில விளம்பரங்களும், அவை என்னை படுத்தும் பாடும் கேளுங்கள் :

முதலில் AXE DEODORANT விளம்பரங்கள்- இவை சொல்லவருவது என்னவென்றால், DEODORANT ஐ உடல் முழுவதும், நகராட்சியில் கொசு மருந்து அடிப்பது போல அடித்து கொண்டீர்கள் என்றால், அழகழகான சைஸ் ஜீரோ பெண்கள் நாலா திசையிலிருந்தும்(சமயத்தில் கூரையை பிய்த்து கொண்டும்) உங்களை தேடி வருவார்கள். சுமார் நூத்தி முப்பது ரூவாய் ஐம்பது பைசாவில் முடிந்து விடக்கூடிய சுலபமான வழி இது..!! இதை நம்பாமல் என் நண்பன் தன் ஒரே ஒரு காதலியின் மனதை கரைக்க, மாங்கு மாங்கென்று கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான்..(ஒரே சமயத்தில் வரும் இத்தனை பெண்களையும் சமாளிப்பது எப்படி என்று டப்பியில் சின்ன எழுத்தில் போட்டிருப்பார்களா தெரியவில்லை..)


ஒரு லிக்விட் சோப்பு விளம்பரம். ஒரே ஒரு ஸ்பூன் சோப்பு கொண்டு ஒரு அம்மணி தன் புடவை துளி கூட கசங்காமல் கூடை பாத்திரத்தை தேய்க்கிறார். நானும் அது போல தந்தால், என் வீட்டில் வேலை செய்பவர்,
"ஐய..தம்மாத்தூண்டு தந்தா, அயுக்கு எப்டி போவும்??நா தா போய்டுவன், உ வேலயே வேனாமினு!!!.." என்று பயம் காட்டுகிறார்.

இதே கதை தான் துணிகளுக்கும்..'கறை நல்லது' சோப்பு கம்பெனிக்கு தான். அது போல துணிய ரெண்டு நாள் துவைக்க போட்டீங்கன்னா, அடுத்த ஜென்மத்துல கூட உங்களுக்கு வேலைக்கு ஆள் கிடைக்காதுங்கறது உறுதி.


இது கொஞ்சம் வேற மாதிரி - விஜய் டிவியில் தினமும் பதினோரு மணி வாக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகள் கருப்பு கண்ணாடி அணிந்து வந்து, கூடுவாஞ்சேரி அருகில் உள்ள பிளாட், சென்னை தான் என்று சொல்லி கூவி கூவி விற்கிறார்கள்.(அதோ தெரியுது பாருங்க ரயில்வே ஸ்டேஷன், NH 45, அந்த நிலா --இது எல்லாமே இந்த பிளாட்லேருந்து நடக்கற தூரம் தான்!) இந்த ஆட்டோ டிரைவர்களுக்கு இது புரிந்தால் தானே?? தாம்பரம் தாண்டினாலே சொத்தில் ஒரு பங்கு கேட்கிறார்கள்..ஒரு நாள், 'நீயா? நானா?'வில் இவர்களை மோத விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என்பது என் ரொம்ப நாள் ஆசை.அதையும் நிறைவேற்றிவிட்டார்கள்.



சாப்பாட்டுக்கு வருவோம் - என் வீட்டு டிவியை எப்போது உயிர்பித்தாலும் வரும் போகோ/சுட்டி டிவி/ஆதித்யா சானல்களில் 15 நிமிடத்துக்கு ஒரு முறை வந்து, நூடுல்ஸ், சாக்கலேட், பிஸ்கட், சிப்ஸ் வகையறாக்களில் வைட்டமின் A முதல் Z  வரை இருப்பதாக விளம்பரங்கள் கற்பூரம் ஏற்றாமல் சத்தியம் செய்கின்றன..ஆஹா, இதை நம்பினால் தான் எவ்வளவு சவுகர்யம்??? ஆனால் ஸ்கூல் திறந்தவுடன் டைரி என்று ஒன்றை கொடுத்து, மேற்படி வகையறாக்களை "junk food" என பெயரிட்டு இவற்றை கொண்டுவர கூடாதென்று அச்சடித்து தருகிறார்கள்..

சோப்பு மற்றும் இன்னபிற அழகு சாமான்கள் :

இருபது வயது மதிக்க தக்க நடிகைகள், 2 நாள் முன் மார்கெட்டுக்கு வந்த சோப்பே தன் அழகுக்கு காரணம் என்று கட்டியம் கூறுகிறார்கள்.
சரி இவர்கள் சொல்படி நடப்போம் என்றால், எனக்கு த்ரிஷாவையும், என் கணவருக்கு கட்ரினாவையும், மகளுக்கு ஐஸ்வர்யாவையும், மாமியாருக்கு பயத்தமாவையும் பிடித்திருக்கிறது..
நாங்கள் எதை வாங்குவதென்று முடிவு கட்டுவதற்க்குள், ஒன்று அந்த நடிகை தன் அழகுக்கான காரணத்தை வேறு சோப்பு அல்லது கிரீம் என்று மாற்றிக்கொள்கிறார். அல்லது சோப்பு தனக்கு வேறு அழகியை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது..


இது இப்படியென்றால், "உங்க டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா?" என்று ஒரு நடிகை தினமும் வந்து மிரட்டுகிறார். என் பேஸ்ட்டில் இருப்பது உப்பா, சர்க்கரையா...ன்னு நான் கண்டுபிடிப்பதற்குள், எதுக்காகவும் facebook பக்கமே வராத தோழி, நான் உபயோகிக்கும் டூத் பேஸ்ட்டில் இருப்பது 'நிகோடின்' என்று ஒரு செய்தியை போட்டு, பிடித்து கொண்டிருந்த கடைசி ஆணியையும் பிடுங்கிவிட்டு மாயமாகிறாள்..

ஸ்ஸ்ஸ்ஸ்....முடியலங்க!! விளம்பரம் என்றாலே பொய் தான் என உறுதியாக நம்பும் நேற்றைய தலைமுறைக்கும் , எல்லா விளம்பரங்களையும் கண்டு ஏமாறும் அடுத்த தலைமுறைக்கும் நடுவில் நாங்கள் திண்டாடுவது உங்களுக்கு தெரியுமா?

தெரிந்தால் மீள்வதற்கு வழியும் சொல்லுங்கள்.

இந்த தேசத்தின் எல்லா தங்கமணிகள் சார்பாகவும்,
ஒரு குடும்பத்தலைவி

பி.கு: பதிவோட தலைப்பு சும்மா போங்கு'க்காக.. எவ்ளோ தான் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதினாலும் கம்பெனி பக்கம் யாரும் வர்றதில்ல..இப்டி தலைப்பு வச்சா வர்றாங்கலான்னு பார்த்தேன். இதோ நீங்க வந்துட்டீங்க.  :-)

Tuesday 11 September 2012

இந்தியா


யார் இந்த உதயகுமார்?


இந்த வீடியோவை பார்த்து அதற்க்கான் விடையை தேடுவோம்..http://www.youtube.com/watch?v=-qevsth2NHM&feature=colike



கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் நூலில் இருந்து...

வீதி நாடக கலைஞர் சப்தர் ஹஸ்மி கொலை செய்யப்பட்டபத்தாவது நினைவு விழாதஸ்தக் தில்லியில் 1998ல் ஒரு பெரும் சர்வதேசவிழாவாக கொண்டாடப்பட்டது.அங்கு உதயகுமார் ஹிந்துத்துவ அரசியலின் போக்குகள்குறித்து மிககாத்திரமான பார்வையுடன் ஒரு சொற்பொழிவைநிகழ்த்தினார். அவரது பேச்சுஅன்று ஹிந்துத்துவத்தின் போக்குகள் குறித்து ஒருசெரிவான உரையாடலைச்சாத்தியமாக்கியது. அன்று மாலை ஒர் உரையாடலின்போது என்.ராம் எனக்கு இவர்ஒரு தமிழர் பெயர் உதயகுமார் என்று அறிமுகம்செய்து வைத்தார்.உதயகுமாருடனான நட்பு அந்த கணத்தில்தான் மலர்ந்தது.அப்பொழுது அவர்அமெரிக்காவின் மினியாஃபாலிசில் உள்ளமினியஸோட்டா பல்கலைக்கழகத்தில் இனம்மற்றும் வறுமை Race and poverty பற்றியஆய்வுத்துறையில் பேராசிரியராகவந்தார். அவரது பல கட்டுரைகளை வாசிக்கத்தொடங்கினேன். இலங்கை பிரச்சினைதொடர்பான Intervention in srilanka: history andprospects ஸும் இந்தியஹிந்துத்துவ அரசியல் தொடர்பான Presenting thepast: the politics ofhindu history writing in india வும் உலகம்வரலாறு சமூகம்சார்அறிவுஜீவிகள் மத்தியில் பெரும் அதிர்வுகளைஏற்படுத்தின. அவர் இணையத்தில்அமைதிக்கான சமாதானத்துக்கான ஒரு படிப்பை நடத்திவந்தார். பாஜக அரசுஆட்சிக்கு வந்து இங்கு செய்த பல மோசடிகளை அவர் தன்வலைத்தளத்தில் http://WWW.bjpgovermentwatch.com எழுதிவந்தார். இந்த வலைத்தளம்சார்ந்த ஆலோசனைகளை என்.ராம் அவர்கள் வழங்கினார்.இங்கு அவுட்லுக்,இந்தியாடுடே என பல ஆங்கில பத்திரிக்கைகளில்தொடர்ந்து அவரது கட்டுரைகள்வெளிவந்தன. அவர் அமெரிக்காவில் பணியாற்றியபல்கலைக்கழகத்தில் உள்ளமாணவர்களுக்கு பல இந்திய அறிவுஜீவிகளை அறிமுகம்செய்தார். ஆஷிஷ் நந்தி,என்.ராம், அட்மிரல் ராம்தாஸ், பிரபுல் பித்வாய், அஃசின்விநாயக், க்யான்பிரகாஷ், கே.என்.பணிக்கர், அஸ்கர் அலி என்ஜினியர் எனபல எழுத்தாளர்களை,செயல்பாட்டாளர்களை அவர் அமெரிக்காஅழைத்துச்சென்று பல்கலைக்கழகத்தில்உரைகள் நிகழ்த்தச்செய்தார். அமெரிக்கவாழ் இந்தியர்கள்மத்தியில் மிகவும்சுறுசுறுப்பான செயல்பாட்டாளராக அவர் திகழ்ந்தார்.2007 ல் வாஷிங்டன் டி.சியில் நடந்த விழாவில் வடஅமெரிக்கத்தமிழ்ச்சங்கப்பேரவை அவரது பணிகளைப்பாராட்டிவிருது கொடுத்து கௌரவித்தது.அவரது பிரியத்திற்குறிய பாட்டி புற்று நோயால்மிகவும் அவதிப்பட்டு மரணம்அடைந்தார், அப்பொழுது அவரின் பெற்றோர் அந்தபாட்டிக்கு அருகில் அவரை பலஆண்டுகள் அனுமதிக்கவில்லை. மெல்ல அவரதுகுடும்பத்தில் பலர் புற்றுநோயால்இறந்தனர். இந்த பிண்ணணியில்தான் கதிரியக்கம்ஏற்கனவே அதிகமாக உள்ளகன்னியாகுமரியில் அணு உலையைத் திறந்தால் இங்குள்ளமக்கள் மிக வேகமாகபுற்றின் வலையில் விழுந்து மடிவார்கள்என்பதால் கூடங்குளம் உலையை பற்றி அரசு அறிவித்தநாள் முதல் அது சார்ந்துசெயல்படத் தொடங்கினார். ஒவ்வொரு வருடமும்விடுமுறையில் அவர் இங்கு வரும்போது தன் குடும்பத்தினருடன் செலவிட்ட நேரத்தைவிட, இந்த ஆபத்தைஎப்படியும் விளக்கிவிட வேண்டும் என்று இங்குள்ளமக்கள் மத்தியிலும்,நாகர்கோவில் வாழ் பெரியவர்களுடனும்செலவிட்டதுதான் அதிகம். சிலவிடுமுறைகளில் இடதுசாரி நாடாளுமன்றஉறுப்பினர்களை எல்லாம் தில்லியில்சந்தித்து அனைவருக்கும் இது பற்றிய எல்லாஆதாரங்களையும் கொடுத்தாள்ளார்.பின் ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கே வந்துதங்கிவிட்டார். தொடர்ந்துஇந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் உள்ள அணுஆயுத, அணு உலை எதிர்ப்புஇயக்கங்களை ஒருங்கிணைத்து வருகிறார்.அமெரிக்காவில் வாழ்ந்தபின்ஏகாதிபத்திய அடிவருடிகளாக மாறாமல். தன் தாய்நாட்டிற்காக எல்லாவற்றையும்விடுத்து தன் மனசாட்சியின் குரலைப் பின்தொடர்ந்துவந்த மிகச்சிலரில்முதன்மையானவர். 



நன்றி
திரு ஆ.முத்துகிருஷ்ணன்

Monday 10 September 2012

சித்திரை பூக்கள்: சிறுகதைகள்

சித்திரை பூக்கள்: சிறுகதைகள்:                                                     முடிச்சிகள்(knots)  இது என் முதல் பதிவு படித்துவிட்டு பிடித்தால் லைக்கவும்.....    ...

சிறுகதைகள்


                                                    முடிச்சிகள்(knots)

 இது என் முதல் பதிவு படித்துவிட்டு பிடித்தால் லைக்கவும்.....

        குமார்(வயது 27,தாய் தந்தை அற்ற அனாதை) விரைவிலேயே பணக்காரனாக வேண்டும் என்ற என்னம் கொண்டவன்.அதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழி வங்கியில் கொள்ளை அடிப்பது.முதலில் அவனை பற்றி பார்போம்,அனாதை ஆசிரமத்தில் படித்து வளர்ந்தவன்.பெரம்பலூரில் உள்ள இந்தியன் பாங்க் அருகில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தான்.அப்போது அந்த வங்கியில் உள்ள செக்கூரிடியின் தொடர்பு கிடைத்தது.மேலும் கடைக்கு வருபவர்களிடமும் நல்ல பழக்கம் கிடைத்தது.எனினும் அவன் நடத்தை சரியில்லாத காரணத்தால் அவனை அந்த கடை முதலாளி வேலையை விட்டு தூக்கி 2 மாத காலம் ஆகிறது.

      அந்த இந்தியன் பாங்க் கில் தற்போது உள்ள மானேஜர் மாற்றபட்டு புதிதாய் ஒருவரை நியமித்து உள்ளது.அவர் பெயர் முத்துசுந்தரம் சுருக்கமாக MS என்றே செல்லமாக அழைத்தனர்.புத்தி கூர்மை உள்ள ஒரு மனிதர்.

      அந்த வங்கியில் கொள்ளை அடிப்பதற்காக குமார் திட்டமிட்டான்,அதன் படியே ஒரு பெண்ணை செட்டப் செய்து(தப்பான செட்டப் இல்ல நடிக்க) வரவழைத்து திட்டத்தை கூறுகிரான்.மேலே சொன்ன அந்த செக்கூரிடியிடம் தன் திட்டத்தை கூறி அவனை சம்மதிக்க வைக்கிறான்.குமார் செக்கூரிட்டியிடம்”மச்சி இந்த கொள்ளை திட்டம் சிறப்பாக முடிய நீ ஒன்னு செய்யனும்,லாக்கர் சாவி யாரிடம் இருக்குனு சொல்லு சரியா முடிஞ்சா அதுல 35% உனக்கு தரேன்”னு சொல்லி அவனை சம்மதிக்க வைக்கிரான்.

      திட்டபடி அமாவாசை தினத்தன்று,ஒரு மாருதி ஆம்னி வாடகைக்கு எடுது அந்த பெண்ணிடம் சொல்கிரான்”மயக்கம் போட்ட மாதிரி சரியா நடிமா உன்ன வச்சி தான் இத நடத்தவே போரேன்”அவளும் “நடிப்புல நான புலியாக்கும்”னு சொல்லி கிளம்பினாள்.

      திட்டம் நிறைவேர நேரம் கூடியது,நள்ளிரவு 10 மணியளவில் MS வீட்டின் அருகே வண்டியை சத்தமில்லாமல் நிறுத்தினான்.”அப்டியே மயங்கின மாதிரியே இரும்மா நான் உன்ன அப்டியே தோள்ல சாய்த்து தூக்கிட்டு போரேன்”னு சொல்ரான் அவளூம் ஆப்படியே உயிர கொடுத்து நடிக்கிரா.

    உண்மையிலே அவ நடிப்புல புலி தான் அப்டியே மயங்கிய நிலையிலேயே இருப்பதுபொலவே நடித்தாள்.”சார்,சார்,சார்” என்று மெதுவாக கூப்பிட்ட படியே கதவை தட்டினான்.சிறிதுநேரத்திர்கெல்லாம் MS வந்து கதவை திறந்து”ஹெலோ யாரு நீங்க உங்களுக்கு என்ன ஆச்சி”னு கேட்டார்.”இல்ல சார் நான் வண்டில வந்துகீடு இருந்தேன் அப்ப யாருனு தெரில இந்த பொண்ணூ தெருவுல மயங்கி கிடந்தா அதான் பக்கத்துல இந்த வீடு இருந்தது,அதுக்கு தான் first aid பண்ணி இந்த பொண்ணை அவ வீட்டுக்கு அனுப்பிடலாம்னு பாத்தேன் சார்.

     சரி இருங்க இந்த டவல கழட்டி வச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வந்துடுரேன்.அந்த பொண்ண இங்க சோஃபா ல போட்டு நீங்க இங்க உக்காருங்க.அப்டியே பக்கத்துல directory இருக்கு அதுல எங்க டாக்டர் நம்பெர்க்கு ஃபோன் பன்னி சொல்லிடுங்கனு சொல்லிட்டு MS உள்ளே சென்றான்.

    அவன் உள்ளே சென்ற சின்ன கேப்புல குமார் டீவி யின் அருகே இருந்த அந்த சாவி கொத்தை எடுத்து தான் கொண்டு வந்த சாவியை அங்கு வைத்து தன் திட்டத்தில் பாதி கிணரு தாண்டினான்.MS வெளியே வந்தான்,வந்ததும் டாக்டருக்கு ஃபோன் செஞ்சிங்கலா நு கேட்டார்.குமார் பதட்டதுடன்,பண்ணிடேன் சார் இன்னும் 10 நிமிசத்துல வந்துடுரேன்னு சொன்னாருனு சொன்னான்.

    மயக்கத்தில இருந்து எழுந்தது போல பாசங்கு காட்டி எழுந்தால்.எல்லா படத்துலயும் காட்ரதுபோல”நான் எங்க இருக்கேன்,நீங்கலாம் யாரு நு கேட்டாள்”.நீ இப்ப என் வீட்டுல தான் இருக்கமா,மயங்கி நீ தெருவுல விழுந்து கிடந்த இந்த புண்ணியவான் தான் உன்னை இங்க போட்டு பாத்துகிட்டாருனு சொன்னா, உடனே அவ”அய்யோ நான் வேப்பந்த்தட்டை சார் இங்க என் ஃபிரண்ட் அ பாக்க வந்தேன் நடந்து வரும்போது அப்டியே மயங்கிடேன்,சாரி சார் இப்பவே ஒவெர் டைம் ஆச்சி கடைசி பஸ் போயிடும்,நான் கிளம்புரேன் சார்,ரொம்பா தேங்க்ஸ் சார்”னு சொல்வதற்க்குள்,சரி சார் அப்டியே நானும் கெளம்புரேன் அந்த பொண்ண பஸ்டாப் ல விட்டுடு நானும் பொரேன்னு சொல்லி குமாரும் ஜகா வாங்கினான்.அவர்களை ஒருமுறை பார்த்து சரி போட்டு வாங்க என கூறி விடுமுறை வழங்கினான்.

      சூப்பரா நடிச்சமா நீயெல்லாம் நல்ல வருவனு கூறி 10 ஆயிரம் வழங்கி வீட்டுக்கு அவளை அனுப்பினான். அனுப்பிவிட்டு நேரே பாங்கிற்கு சென்றான்.அவனும் அந்த காவலாளியும் கதவை திறந்தனர்.

      பின்னாடி இருந்து ஒரு சத்தம்”ஹாண்ட்ஸ் அப்” அந்த சரக போலிஸின் குரலது.அவ்லோ தான் எல்லாம் முடிந்தது,அவனையும் அந்த காவலாளியையும் கையும் களவுமாக பிடித்தனர் போலிஸ். சார் நாங்க இன்னைக்கு திருட போரோம்னு உங்களுக்கு எப்படி இந்த விசயம் தெரிஞ்சதுனு சொல்லுங்க சார்,என்றான். உடனே வா காலைல எல்லாம் அவரே சொல்லுவாருனு சொல்லி காவல் நிலையம் அழைத்து சென்றது போலிஸ்.

    சூரியன் உதித்தது ஆனால் அவனை யார் காட்டி கொடுத்திருப்பர் என் அது மட்டும் அவனுக்கு உதிக்கவில்லை.பின்னாடி போலிஸ் யாரிடமோ பேசுவது போல அவனுக்கு கேட்டது.அதை கூர்ந்து கவனித்தான்.Mr.MS சரியான நேரத்தில தகவல் கொடுத்ததால அவங்கள பிடிசிடோம்.ஆமா உங்களுக்கு எப்படி அவங்க இன்னைக்கு திருடபோராங்கனு கண்டுபிடிச்சி சொன்னிங்க,ஓ ஓ அதுவா சார் அவங்க பாங்க் ல திருட போராங்கனு தெரிஞ்சிக்க ஒரு காரணம் இல்ல மொத்தம் 3 காரணம் இருந்தது,சொல்ரேன் கேட்டுகோங்க,

       நான் குடி இருக்கும் அந்த வீதியில இப்ப தான் செம்மண் ஆல் ஆன வீதி போட்டாங்க.அந்த பொண்ணு மயங்கி கீழ விழுந்து கிடந்ததா அவன் சொன்னான். ஆனா அந்த பொண்ணு கீழ விலுந்துஇருந்தா அதோட white dress ல எந்த கரையும் தெரியல,இதனால எனக்கு கொஞ்சம் டௌவ்ட் வந்தது.அத கிளியர் பண்ண தான் எங்க ஃபாமிலி டாக்டருக்கு ஃபோன் பன்ன சொன்னேன்.அவரு மதுரைக்கு போய் 2 நாள் ஆகுது அவரு இன்னைக்கு(அதாவது நாளைக்கு) தான் வருரேனு சொன்னாரு,ஆன இந்த ஆளூ இன்னும் 10 நிமிசத்துல வந்துடுவாருனு சொன்னதா சொன்னான். அதனால கொஞ்சம் கண்ஃபார்ம் பன்னவே சாவிகொத்த எடுத்து டீவி பக்கத்துல வச்சேன்.ஆனா அதுக்கு பதிலா வேர இருக்கவும் உடனே உங்களுக்கு ஃபோன் பன்னேன்.அப்றம் தான் நடந்தது உங்களுக்கே தெரியுமேனு சொல்லி MS முடித்தார்.

      குமார் மனதுக்குள் இதனால தாண்ட இவன இந்த பாங்க் ல மானேஜரா போட்டுருக்காங்க உன்கிட்ட தோத்ததுல நான் பெரும படுரேன். அய்யோ அவளால தான் நாம மாட்டினோன் கடைசில 10 ஆயிரம் ரூபாயும் வேர இழந்துடோம்.அடுத்த முறை இந்த தப்பெல்லாம் இல்லாம சரியா திருடனும் கண்டிப்பா அவள கூப்பிட கூடது என கூறிகொண்டோ சுவரை முட்டினான்.

Sunday 9 September 2012

பாகன் விமர்சனம்


               வாழ்க்கையில் மிகச் சுலபமாய் பணக்காரன் ஆக முயற்சி செய்யும் ஆர்வமான இளைஞனான சுப்ரமணியின்(ஸ்ரீ காந்த்) கதை தான் இந்த பாகன். 
              வழக்கம் போல உடன் ரெண்டு நண்பர்கள். பணத்திற்காக ஒரு பணக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து செட்டிலாகலாம் என்று நினைத்து ஜனனி ஐயரை காதலிக்க, அவரோ சொத்தெல்லாம் வேண்டாம் என்று எல்லாத்தையும் கழட்டிப் போட்டுவிட்டு வந்துவிடுகிறார். தனக்கு பணம் தான் முக்கியம் என்று காதலை மதிக்காத சுப்ரமணிக்கு பின்னால் தான் தெரிகிறது. அவள் தன்னை எவ்வளவு காதலித்திருக்கிறாள் என்று. பின்பென்ன.. அவர்கள் எப்படி சேருகிறார்கள் என்பதை ஒரு சைக்கிளின் பார்வையில் சொல்லியிருக்கிறார்கள்.


        ஸ்ரீகாந்தின் நண்பர்களாய் சூரியும் பாண்டியும் வருகிறார்கள். பல இடங்களில் இவர்கள் காமெடி செய்கிறேன் என்று பேசிக் கொண்டேயிருப்பது எரிச்சலாய் இருக்கிறது. பல இடங்களில் பாவம் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்று  வருத்தமாகவும் இருக்கிறது.    தக்காளி எக்ஸ்போர்ட் செய்கிறார்கள், கோழிப் பண்ணை வியாபாரம் செய்கிறார்கள் அதில் எல்லாம் எப்படி தோற்கிறார்கள் என்று காமெடியாய் சொல்கிறேன் என்று இம்சை படுத்துகிறார்கள்.பாண்டியாவது பரவாயில்லை, சூரி இவர் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பது கொஞ்சம் எரிச்சலாகவேயிருக்கிறது.
 
     சைக்கிள் கதை சொல்வது போல அமைத்திறுப்பது புதிய அனுபவம் தான் என்றாலும் அது ஏனோ நம்மை நெருடலுக்கு உள்ளாக்குகிறது.நம்முடைய பொறுமைய ரொம்பவே சோதிக்கிறதுக்காகவே இந்த படத்த எடுத்துருப்பாங்க போல,திரைகதை ஓட்டம் ரொம்ப மோசம்.அ.வெங்கடேஷ் வில்லனா வராறு ஆனா நடிப்பிற்கான வாய்ப்பு மிக குறைவு.சூரி அந்த மனுசன காமெடி நடிகனு யாரோ சொல்லிடங்க போல அதுக்காக அவரு ரொம்ப கஷ்ட படுராறு...கூடவே தியேட்டர்ல இருக்க எல்லாம் கஷ்ட படுரோம்.

    ரொம்பவே லாஜிக் மீரல்கள் இருக்கு அத எல்லாம் எழுதினா டைம் தான் வேஸ்ட் ஆகும்...காமெடி படத்துல லாஜிக் பாக்க கூடாது தான்..ஆனா இந்த படம் பத்துதான் சிரிப்பே வரலயே அதனால லாஜிக் பாக்குரதுல தப்பில்லை....


எதிர்பார்க்க படும் மதிப்பெண்:
ஆனந்தவிகடன்: 38
குமுதம்:ஓகே
behind woods:2/5

முகமூடி_விமர்சனம்



முகமூடி

ரொம்பவே சாதரணமான கதைதான்...கதாநாயகன் ஜீவா, வழக்கம்போல வேலவெட்டி எதுவும் இல்லாத தண்டச்சோறு.
அவர் செல்வா மாஸ்டரிடம் குங் பூ கற்றுக்கொள்கிறார்.

சென்னைப்போலீஸை வெண்ணையாக நினைத்து, நரேன் என்ற முகமூடி கொள்ளைக்காரன் கொலை, கொள்ளை என்று அட்டகாசம் புரிகிறான்.

இதைத துப்புத்துலக்குவதற்காகவே நியமிக்கப்படும் கமிஷனர் நாசர், கையைப்பிசைந்துகொண்டு நிற்க, பஞ்சத்துக்கு முகமூடிபோட்ட ஜீவா, பரம்பரையாக முகமூடிபோட்ட நரேனின் கதையை முடிக்கிறார்.

இடையில் மானே, தேனே, பொன்மானே போட்டுக்கிற மாதிரி, லவ் டூயட், குழந்தைகள் கடத்தல், பார் சாங் போன்ற சகலமும் உண்டு...

நரேன் என்ன கார்ப்பெண்டரா எப்பபாத்தாலும் கைல சுத்தியலோட வராரு,ஜீவாவுக்கு பிஞ்சி மூஞ்சி பஞ்சு வாயி அதனால சூப்பர் ஹீரோக்கு(NEP getup laye irukkurathu) கொஞ்சம் நெருடல்....ஹீரொயின் சூப்பர்,நாசர் வழக்கமான தன் பணியை அருமையாக செய்துள்ளார்,..

1 பாதி காமெடி,சண்டை நு விருவிருப்பாபோனாலும் 2ஆம் பாதி குழப்பமான மனநிலையில் மிச்கின் எடுத்திருப்பது தெளிவா தெரியுது..அதனால 2ஆம் பாதி சுமாரா இருக்கு....

ப்ளஸ் பாயிண்ட்:
1) கே இசை(மிரட்டலான பாடல்கள்,பின்னனி இசை....)
2)சத்யா ஒளிப்பதிவு(80%இருட்டில் தான் அருமையான ஒளிப்பதிவு,
3)படத்துல ஒபனிங் நொறுக்கி தள்ளிடாங்க பா .....

மைனஸ் பாயிண்ட்:
1)ரொம்பவே வீக் ஆன கதை(சின்னகௌண்டர் ல அரம்பிச்சி வாமனன் வரைக்கும் இதே கதை தான்)
2)எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதது


மொத்ததில் சித்திரம்பேசுதடி,அஞ்ஜாதே,நந்தலாலா ,யுத்தம் செய் படம் எடுத்த மிஸ்கின் ஆஹ இத எடுத்ததுனு கேக்க வைக்கிரார்....படம் பாத்தா தியேட்டர்ல பாருங்க...சீடி ல அந்த அளவுக்கு எஃபெக்ட் இருக்காது......

எதிர்பார்க்கபடும் மதிப்பெண்:
ஆவி- 42
குமுதம்-ஓகே
b.woods-2.75