Friday 30 November 2012

நீர்பறவை-விமர்சனம்

               ஹீரோ ஒரு சரக்கு பார்ட்டி,எப்ப பாத்தாலும் குடி குடினு ஊர சுத்துர ஆளு,குடிக்காக யார்கிட்டயும் கையேந்தகூட தயங்காதவர்.அம்மா அப்பா ஒரு மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள்,ஹீரோயின் சர்ச்ல ஒர்க் பண்றாங்க,ஹீரோயினை பார்த்ததும் ஹீரோ லவ்விங்.குடிக்கு அடிமை இப்ப காதலுக்கும் ஆகிறார்.

                  ஹீரொவை குடி ஹாஸ்பிடல்ல சேத்து குடில இருந்து மீட்குராங்க.இப்ப ஹீரோயின் ஹீரோவ கடல்ல போய் மீனவர்களோட சேர்ந்து மீனவரா ஆகுங்கனு சொல்றா.ஆன ஹீரோவ மீனவர்கள் கடக்கு போக அனுமதிக்கல,ஏன்னா ஹீரோ மீனவர் கிடையாது அவர் ஒரு அனாதை தத்துபிள்ளை,அவர் காத்லிக்காக மீனவர் ஆகுரார இல்லையா என்பதை சொல்லவரும் படம் தான் இந்த நீர்பறவை.

               ஹீரோவாக விஷ்ணு நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம்,ஆனா குடிகாரன் போன்ற நடிப்பு இவரு முகத்துக்கு செட் ஆகல,ஹீரோயின் சுனைனா செம நடிப்பு இயல்பா இருக்காங்க,இவரின் வயதான தோற்றதுக்கு நந்திதா தாஸ் செம தேர்வு,ஆனா இவங்களுக்கு நடிக்க வாய்ய்ப் கம்மி தான்.வழக்கமான அம்மா கேரக்டெர் சரண்யாவுக்கு பிரிச்சி மேயுது இந்த ஆண்டி,பையன் குடிக்க காசு கேக்கும் பொது இவரின் நடிப்பு அற்புதம்.சமுத்திரகனி வருவது கொஞ்சம் தான் என்றாலும் மனதில் நிற்கிறார்.

               கண்ணியமான காதல் கதை,நேர்த்தியான திரைக்கதைதான் இருந்தாலும் சொன்ன விதம் இன்னும் அழுத்தம்மாக கூறி இருக்கலாம்.மீனவர்கள் பற்றிய படம் என எதிர்பார்த்து செல்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.மிகபெரிய பலம்(வசனம்.பாடல்கள்,ஒளிப்பதிவு)


எதிர்பார்க்கபடும் ஆனந்தவிகடன் ரேட்டிங்-43
குமுத,-ஓக்கே

1 comment: