Saturday 6 October 2012

வாரிசுகளிடம் தமிழ் சினிமா

                              வாரிசுகளின் பிடியில் தமிழ் சினிமா...

இந்த தலைப்பில் நான் என் உணர்வை ஒரு பக்கமாவது வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிரேன்...

முதலாவதாக ”இயக்குனர்” A.L.விஜய் இவரை பற்றி கூறி ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.இவர் பிரபல தயாரிப்பாளர் சங்க தலைவர் A.L அழகப்பன் அவரின் வாரிசு.....

தன்னை ஒரு நல்ல இயக்குனர் என வெளிப்படுத்த முதல் படத்தை கேராளாவில் வெளிவந்து தேசியவிருது பெற்ற கிரிடம் என்ற படத்தை உரிமம் பெற்று தமிழில் மொழிக்கேற்ப மாற்றம் செய்து இயக்கினார்.அதில் இவரின் வேலை குறைவு தான் என்றாலும் நல்ல இயக்குனர் எனும் பெயரை பெற்றார்.
அடுத்து இவரது இரண்டாவது படம் பொய் சொல்ல போறோம்,செம மொக்க படம்.

விட்ட இடத்தை பிடிப்பதற்காக அவர் எடுத்தது சென்னையை,1947 மெட்ராஸில்  ஆங்கிலேய ஆளுனரின்மகளும் ஒரு இந்தியனும் காதலித்தால்...இந்த தளத்தை அடிப்படையாக வைத்து வந்த படம் மதாராசபட்டினம்.படம் நல்ல இருந்ததாலும் பழைய சென்னையை நினைவு கூர்ந்ததாலும் படம் வெற்றி வாகை சூடி இவருக்கு நன்பெயரை ஈட்டி தந்தது.இருப்பினும் இப்படத்தை பார்த்தவர்களால் இது டைட்டானிக் படத்திலிருந்து உருவப்பட்ட ஒரு கதை எனபது கண்கூடாக தெரியும்.

அடுத்து தெய்வ திருமகள் படத்திற்க்கு வருவோம்,இங்கே இவர் கதையை மட்டும் உருவவில்லை ஒட்டு மொத்த படத்தின் திரைக்கதையும் உருவி தெய்வ திருமகளாக வெளியிட்டார்.அவர் சுட்டது சாதாரணமான படமாயிருந்தாலும் பரவால்லை ,அவர் சுட்டது I AM SAM என்ற ஆஸ்கார் விருது அள்ளிய திரைப்படம்.

இதையும் விட மிக மோசமான ஒன்று தன் வாழ்நாள் லட்சிய படம் என்று எடுத்து அவர் தனது உதவி இயக்குனரின் வாழ்வில் தாண்டவம் நடத்திய தாண்டவம் படம் தான்.தனது உதவி இயக்குனர் UTV நிறுவனத்துடன் சேர்ந்து எடுக்கவிருந்த படத்தை(விக்ரமாதித்யன் என பதிவு செய்ய பட்டிருந்தது) தனது செல்வாக்கை பயன்படுத்தி கதை,திரைகதை என அனத்தையும் சுட்டு எடுக்க பட்டது தான் இந்த தாண்டவம் ...இப்ப சொல்லுங்க தன் ஒரு படமும் இவருடய சொந்த திறமையால் எடுக்க பட்டது இல்லை..ஆனால் இவர் தற்போது உள்ள இயக்குனர்களில் முன்னனியில் இருப்பதில் ஒருவர்...



அடுத்து ஜெயம் ராஜா..இவரின் தந்தை எடிட்டர் மோஹன்...

தனக்கென ஒரு பாணி என்று இல்லாமல் தெலுங்கில் வரும் அனைத்து நல்ல குடும்ப படங்களையும் ரீமேக்கி விடுவதே இவருடைய அசாத்திய திறமை என்றே கூரமுடிகிரது.ஆனால் இவர் அத்தனை படங்களையும் ரீமேக் என்ற பெயரில் எடுத்துவிட்டு,தன் இயக்கத்தில் கடைசியாக வந்த வேலாயுதம் படத்தில் மட்டும் தன் சொந்த கதை திரைகதை என் நம்மிடம் கதை விட்டாலும் அவர் இந்த படத்தையும் தெலுங்கில் நாகர்ஜுனா நடிப்பில் வெளிய்யான ஆசாத் என்ற படத்தின் தழுவல் என்பது படம் பார்த்த அனைத்து தரப்பினரும் உணர்ந்த உண்மை...இருப்பினும் இவரும் இப்போதையா டாக் ஆஃப் தி கோலிவுட் என்பது தான் கசப்பான உண்மை...

இவர்களை விட திறமையான இயக்குனர்கள் தமிழில் இருந்தாலும் அவர்களை இவர்கள் போன்றோர் தனது செல்வாக்கால் ஆரம்பத்திலே நசுக்கிவிடுவது ஒவ்வொரு பெரிய படங்களின் ரிலீசன்றே தெரிந்து விடுகிறது(எ.கா தசவதாரம்,7ஆம் அறிவு,மாற்றான்,தாண்டவம்)



இது இயக்குனர்கள் பற்றியது தான் அடுத்த பதிப்பில் நடிகர்களை பற்றி தொடரும்.....

No comments:

Post a Comment